திரிபுக் கொள்கை விசாரணை
திரிபுக் கொள்கை விசாரணை (Inquisition) என்பது கத்தோலிக்க திருச்சபையின் சட்ட அமைப்பின் ஒருபிரிவு ஆகும். இதன் நோக்கம் திரிபுக் கொள்கையை எதிர்ப்பது. இது 12ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கிறித்தவ பிரிவினையாளர்களுக்கெதிராக, குறிப்பாக கத்தார்கள் மற்றும் வால்டென்சியர்களுக்கு எதிராக துவங்கப்பட்டது. இது 14ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்தது. 1250கள் முதல் இது தொமினிக்கன் சபையோடு தொடர்புடையதாயிற்று. 14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்பிளர் மற்றும் பெகுயின்ஸ் ஆகியோர் இவ்வமைப்பால் விசாரிக்கப்பட்டனர் என்பது குறிக்கத்தக்கது.

மத்தியக்காலத்தின் முடிவில் சீர்திருத்த இயக்கமும் கத்தோலிக்க மறுமலர்ச்சியும் தோன்றியபோது இதன் அவசியமும் தேவையும் மாறியது. இது அவ்வமையம் பிற ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவிலும், அமெரிக்காக்களிலும் நிறுவப்பட்டது.[1]
இவ்வமைப்பு 18ஆம் நூற்றாண்டுவரை நடப்பில் இருந்ததென்றாலும், திருத்தந்தை நாடுகளுக்கு வெளியே நெப்போலியப் போர்களுக்குப் பின் இல்லமல் போயிற்று. 1904இல் இவ்வமைப்பின் பெயர் நம்பிக்கை கோட்பாடுகளுக்கான ஆணைக்குழு (Congregation for the Doctrine of the Faith) என பெயர் மாற்றப்பட்டது.
இவ்வமைப்பால் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவர்கள் அவர்களின் நாட்டு அரசர்களால் சித்தரவதை, உரிமை மறுப்புகள், பொருளாதார தடைகள், மரண தண்டனை என்று பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த நடவைக்கைகளால் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மத்திய காலத்தில் ஐரோப்பாவின் இரண்ட காலத்துக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[2]
மேற்கோள்கள்
- Murphy, Cullen (2012). God's Jury. New York: Mariner Books - Houghton, Miflin, Harcourt. பக். 150.
- J. B. Bury. (1913). Freedom of Thought. New York: Holt and Company.