தியா மிர்சா

டீ என அழைக்கப்படும் தியா மிர்சா (Dia Mirza, பிறப்பு: 9 டிசம்பர் 1981) பாலிவுட் திரைப்படங்களில் தோன்றும் முன்னாள் இந்திய மாடல் மற்றும் நடிகையாவார். இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றார், மேலும் அதைத்தொடர்ந்து வந்த மிஸ் ஆசியா பசுபிக் 2000 போட்டியிலும் வெற்றிபெற்றார்.

தியா மிர்சா
दिया मिर्ज़ा

இயற் பெயர் தியா மிர்சா
பிறப்பு 9 திசம்பர் 1981 (1981-12-09)
ஐதராபாத், ஆந்திரபிரதேசம், இந்தியா
வேறு பெயர் தியா மிர்சா
தியா
டீ
தொழில் நடிகை, விளம்பரஅழகி
நடிப்புக் காலம் 2001-இன்றுவரை
துணைவர் இல்லை
பெற்றோர் பிரான்க் ஹான்றிச்
தீபா மிர்சா

தனிப்பட்ட வாழ்வும் கல்வியும்

தியா மிர்சா, இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஐதராபாத் நகரில் இந்திய பெங்காலி தாய்க்கும் ஜெர்மன் தந்தைக்கும் பிறந்தார்.

ஹைதராபாத்தின் கையிரடாபாத் என்ற இடத்தில் வாழும்போது, ஜித்து கிரிஷ்ணமூர்த்தியின் கற்பித்தல்களை அடிப்படையாகக் கொண்ட பள்ளியான, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் குஷ்னுமாவிலுள்ள நாஸர் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1]. அவர் ஹைதராபாத், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

தியா கலைப்பிரிவில் தனது பட்டப்படிப்பை அஞ்சல்வழி மூலம் நிறைவுசெய்ய விரும்பினார், ஆனால் ஆசியா பசிபிக் அழகிப் போட்டி, மாடலிங் பணிகள், போக்குவரத்து மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கிடையே திறமையாகக் கையாளுவது கடினமானதால், அந்த முடிவைக் காலம்தாழ்த்தத் தீர்மானித்தார். சொல்நடை மற்றும் பாங்கு ஆகியவற்றில் சபிரா மெர்சண்ட்; உணவுக் கட்டுப்பாட்டில் அஞ்சலி முகர்ஜீ; உடற்பயிற்சிக்கூடம் மற்றும் உடல் தகுதியில் டல்வால்க்கர்ஸ்; உடைகளில் ரித்து குமார் மற்றும் ஹேமண்ட் திரிவேதி; உடல் பராமரிப்பில் டாக்டர். ஜமுனா பாய்; மற்றும் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தில் பாரத் மற்றும் டோரிஸ் கொடம்பே ஆகியோர் அவருக்கு உதவி செய்தனர்.[2] அவர் தெலுங்கு, உருது, பெங்காலி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை பெற்றவர்.[3]

திரைப்படத் தொழில் வாழ்க்கை

அவர் ரேஹ்னா ஹை டேரே டில் மீன் படத்தில் ஆர். மாதவனுக்கு ஜோடியாக தனது சினிமா அறிமுகத்தை ஏற்படுத்தினார்.[4] இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியாக அமையவில்லை. தோல்வியுற்ற திரைப்படங்கள் வரிசையாகப் பின்தொடர்ந்தன, அவற்றுள் தும்சா நாஹின் டேகா மற்றும் தீவானாபன் ஆகியனவும் அடங்கும். அவர் 2001 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த அறிமுக நாயகி விருதை வென்றார்.

2005 ஆம் ஆண்டில் விது வினோத் சோப்ரா தயாரிப்பான பரினீட்டா வில் மிர்ஸா தோன்றினார். அதோடு கஜரா நைட் ஆல்பத்திலிருந்தான சோனு நிகம் இசை வீடியோவில் நடிக்கும்போது கஜரா மொகப்பட் வாலா இசை வீடியோவிலும் நடித்தார். ஆல்பத்தில் பற்பல ரீமிக்ஸ்கள் உள்ளன, ஆனால் சோனு நிகம் மற்றும் அலிஷா சினை ஆகியோர் பாடிய தலைப்புப் பாடலைக் கொண்டே பிரதானமாக விளம்பரப்படுத்தப்பட்டது.[5]

டஸ் மற்றும் ஃபைட் கிளப் திரைப்படங்களிலும் அவர் தோன்றினார். பின்னர் இந்த ஆண்டின் இறுதியில் ஃபாமிலிவாலா மற்றும் நா நா கார்ட்டே திரைப்படங்களில் அவர் தோன்றுவார். ஆசிட் பேக்டரி என்ற திரைப்படத்திலுள்ள முக்கிய ஆறு கதாபாத்திரங்களில் தியா மட்டுமே நடிகையாவார்.. அத்திரைப்படத்தில் அவர் ஃபெம்மி பேட்டலி (femme fatale) என்ற ஒரு கொள்ளைக்காரியாக நடிக்கிறார்.[6]

சமூகசேவை

அவர் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சங்கம் (Cancer Patients Aid Association), இந்தியாவின் வலிப்புநோயுள்ளவர்கள் சமூகம் ஆகியவற்றுடன் ஈடுபட்டுள்ளார், HIV விழிப்புணர்வைப் பரப்புதல், பெண் சிசுக்கொலையைத் தடுத்தல், PETA, CRY மற்றும் மிக அண்மையில் NDTV கிரீனாதன் – மாசடைதலுக்கு எதிராக உறுதியான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு முயற்சி மற்றும் ரேடியோ மிர்ச்சி மூலமாக புக் தேக் தேக்கோ (வறுமையில் வாடுகின்ற சிறுவர்களுக்கான புத்தகங்களைச் சேகரிக்க தொடக்கப்பட்ட பிரச்சாரம்) ஆகியவற்றில் ஆந்திரப்பிரதேச அரசாங்கத்துடன் பரவலாகப் பணிபுரிந்தார்.

பொழுதுபோக்குகள்

எழுதுதல் - இந்துஸ்டான் டைம்ஸ் மற்றும் பல்வேறு பதிப்புகளுக்கும் கௌரவ எழுத்தாளராக பல கட்டுரைகள் எழுதியுள்ளார். வாசித்தல், ஓவியம் வரைதல், மட்பாண்டம் செய்தல், குதிரைச் சவாரி மற்றும் திரையரங்கௌ செல்லுதுதல் ஆகியவை அவரின் பொழுதுபோக்குகள் ஆகும்.

சர்ச்சைகள்

அவரும் சக நடிகரான ஆமிர் கானும், நர்மதா பாச்சாவோ அண்டோலன் என்ற அணை கட்டுவதை எதிர்க்கும் குழுவிற்கு வெளிப்படையாகவே ஆதரவைத் தெரிவித்தனர். இது பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அரசியல் செயற்பாட்டாளர்களின் சினத்தைத் தூண்டியது, அவர்கள் இந்த நடிகைக்கு எதிராக கண்டன ஊர்வலத்தை நடத்தினர்:[7].

திரைப்பட விவரங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2001 ரெஹ்னா ஹை டேரே தில் மெய்ன் ரீனா மல்ஹோத்ரா
2001 தீவானாபன் கிரன் சௌத்ரி
2002 தும்கோ நா பூல் பாயெங்கே முஸ்கான்
2003 தேஸீப் நாஸ்னீன் ஜமால்
2003 பிரான் ஜயே பார் ஷான் நா ஜயே சௌந்தர்யா
2003 தும் காவேரி
2004 ஸ்டாப்! ஷாமா
2004 துஸ்மா நஹின் தேக்ஹா ஜியா கான்
2004 க்யூன்...! ஹோ கயா னா பிரீத்தி சிறப்புத் தோற்றம்
2005 நாம் கும் ஜாயெகா நடாஷா/கீதாஞ்சலி
2005 பிளாக்மெயில் மிர்ஸிஸ். ராதொட்
2005 பரிநீத்தா
2005 டஸ் அனு டீர்
2005 கொய் மேரா டில் மீன் ஹைன் சிம்ரன்
2006 ஃபைட் கிளப் - மெம்பர்ஸ் ஆன்லி அனு சோப்ரா
2006 பிர் ஹேரா பெரி குத்துப் பாடல் (பாடல்)
2006 அலாக் பூர்வ ரானா
2006 லேஜ் ராஹோ முன்னா பாய் சிம்ரன்
2006 பிரதீக்ஷா ரீனா பிரவுன் தொலைக்காட்சி வெளியீடு
2007 ஹனிமூன் ட்ராவல்ஸ் பிரைவேட். லிமிடெட். ஷில்பா
2007 ஷூட்டவுட் அட் லோகண்ட்வாலா மிட்டா மது
2007 கேஷ் அடிதி
2007 ஹேய் பேபி ஒரு பாடலில் சிறப்புத் தோற்றம்
2007 ஓம் சாந்தி ஓம் அவராகவே சிறப்புத் தோற்றம்
2007 டுஸ் கஹனியான் சியா
2008 கிரேஸி 4 ஷிகா
2008 கஹோ நா யார் ஹாய் அவராகவே உண்மை அடிப்படையான டி.வி விளையாட்டு நிகழ்ச்சியில், அவரது சிறந்த நண்பர்களான சியட் கஃபைட் அலி மற்றும் அம்னா ஹும்தானி ஆகியோருடன் போட்டியாளர்களாக சாஜிட் கான் மற்றும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து தோன்றினார், இந்நிகழ்ச்சி 1 மார்ச் 2008 அன்று ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பானது.
2009 கிஸான் பிரியா
2009 ஜெய் வீரு அனா
2009 ஆசிட் பேக்டரி மேக்ஸ்
2009 காபி பி காஹின் பி படப்பிடிப்பில் உள்ளது
2009 அலிபௌக் அறிவிக்கப்பட்டுள்ளது[8]
2009 நா நா கார்டே அறிவிக்கப்பட்டுள்ளது[9]
2009 ஃபாமிலிவாலா முந்தைய தலைப்பு 'டில் சாச்சா ஔர் சேஹ்ரா ஜோதா'
இப்போது வரையில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை
2009 பிடாடர் லேகா ரியா அறிவிக்கப்பட்டுள்ளது
2009 கயனாத் அறிவிக்கப்பட்டுள்ளது[10]
2009 பிட்ஸ் அண்ட் பீஸஸ் அறிவிக்கப்பட்டுள்ளது[11]
2009 ஆங்க் மிசோலி அறிவிக்கப்பட்டுள்ளது[12]
2009 ஃபுரூட் அண்ட் நட் மோனிகா கோகல்
2009 குர்பான் ரிஹானா (WIACB நிருபர்) சிறப்புத் தோற்றம்
2009 லக் பை சான்ஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்
2010 ஷூபைட் படப்பிடிப்பில் உள்ளது
2010 ஹும், டும் ஔர் கோஸ்ட் 2010 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று வெளியிடப்பட்டது
2010 ஜானி மஸ்தானா

குறிப்புதவிகள்

  1. "http://www2.sholay.com/". Diya Mirza- MissAsia Pacific/Indian film Actress. பார்த்த நாள் 9 June 2006.
  2. "Dia Mirza Biography". Madeinatlantis.com. பார்த்த நாள் 2008-11-30.
  3. "Facts of Dia Mirza". Madeinatlantis.com. பார்த்த நாள் 2008-11-30.
  4. "Diya Mirza". Diya Mirza. பார்த்த நாள் 7 October 2008.
  5. "http://www.indiafm.com". Diya Mirza in Sonu Nigam’s latest album. பார்த்த நாள் 11 October 2006.
  6. "I am a femme fatale who is also a gangster".
  7. "http://www.rediff.com/". BJP blasts Diya Mirza for anti-dam stand. பார்த்த நாள் 24 May 2006. இருந்தபோதும் சமீபத்திய பேட்டி ஒன்றில், அவர் இதை மறுத்தார்
  8. "http://www.glamsham.com/". Diya Mirza's Triplet. பார்த்த நாள் 4 August 2006.
  9. "http://www.indiafm.com/". ‘Naa Naa Karte... Believe It Or Nuts’. பார்த்த நாள் 11 October 2006.
  10. "http://www.infiafm.com/". Kayanaat Cast. பார்த்த நாள் 21 January 2007.
  11. "http://content.msn.co.uk/". Twenty beauties in a song!. பார்த்த நாள் 11 October 2006.
  12. "http://www.indiaglitz.com/". Anant's 'Aankh Micholi' and 'Agar' only 2 months apart. பார்த்த நாள் 11 October 2006.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.