திணையும் காலமும்

ஓர் ஆண்டை ஆறு பருவ காலங்களாகப் பகுத்துக் காண்பது தமிழ்நெறி. இந்தப் பகுப்பைப் பெரும்பொழுது என்பர். அதே போல ஒரு நாளையும் ஆறு பொழுதுகளாகப் பகுத்துக் காண்பர். இதற்குச் சிறுபொழுது என்று பெயர்.

தொல்காப்பிய நெறி

தொல்காப்பியர் இந்தக் காலப்பொழுதுகளை ஐந்திணை நிலப் பாகுபாட்டோடும், ஐந்திணை மக்களின் ஒழுக்கப் பாகுபாட்டோடும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார். தொல்காப்பியம் அகத்திணையியல் நூற்பா எண் 6 முதல் 10 முடிய உள்ள 5 நூற்பாக்கள் தரும் செய்தியை இங்குள்ள அட்டவணையில் காணலாம்.[1]

திணைசிறுபொழுதுபெரும்பொழுது
குறிஞ்சியாமம்கூதிர்
முல்லைமாலைகார்
மருதம்வைகுறு விடியல்இல்லை
நெய்தல்எற்பாடுஇல்லை
பாலைநண்பகல்இளவேனில், முதுவேனில், + பின்பனி

ஓர் ஆண்டின் 6 பருவ காலம்

பருவம்தமிழர் வழக்கத்தில் உள்ள மாதங்கள்இணையான ஆங்கில மாதங்கள்
இளவேனில்சித்திரை, வைகாசிஏப்ரல் பிற்பகுதி, மே, சூன் முற்பகுதி
முதுவேனில்ஆனி, ஆடிசூன் பிற்பகுதி, சூலை, ஆகஸ்டு முற்பகுதி
கார்ஆவணி, புரட்டாசிஆகஸ்டு பிற்பகுதி, செப்டெம்பர், அக்டோபர் முற்பகுதி
கூதிர் (குளிர்)ஐப்பசி, கார்த்திகைஅக்டோபர் பிற்பகுதி, நவம்பர், டிசம்பர் முற்பகுதி
முன்பனிமார்கழி, தைடிசம்பர் பிற்பகுதி, சனவரி, பிப்ரவரி முற்பகுதி
பின்பனிமாசி, பங்குனிபிப்ரவரி பிற்பகுதி, மார்ச்சு, ஏப்ரல் முற்பகுதி

ஒரு நாளின் 6 பொழுதுகள்

பொழுதுமணி
காலை6 முதல் 10 மணி வரை
நண்பகல்10 முதல் 14 மணி வரை
எற்பாடு14 மணி முதல் 18 மணி வரை
மாலை18 மணி முதல் 22 மணி வரை
யாமம்22 மணி முதல் 2 மணி வரை
வைகறை (வைகுறு விடியல்)2 மணி முதல் 6 மணி வரை

மேற்கோள்

  1. 5. மாயோன் மேய காடு உறை உலகமும்,
    சேயோன் மேய மை வரை உலகமும்,
    வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
    வருணன் மேய பெரு மணல் உலகமும்,
    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும்படுமே
     
    6. காரும் மாலையும்-முல்லை
     
    7. 'குறிஞ்சி,
    கூதிர், யாமம்' என்மனார் புலவர்
     
    8. 'பனி எதிர் பருவமும் உரித்து' என மொழிப
     
    9. வைகறை, விடியல்,-மருதம்
     
    10. எற்பாடு,
    நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
     
    11. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
    முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
     
    12. 'பின்பனிதானும் உரித்து' என மொழிப
     
    13. 'இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
    உரியது ஆகும்' என்மனார் புலவர்
     
    14. திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே;
    நிலன் ஒருங்கு மயங்குதல் இல' என மொழிப-
    புலன் நன்கு உணர்ந்த புலமையோரே
     
    15. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே
     
    16. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
    ஊடல், அவற்றின் நிமித்தம் என்றிவை,-
    தேரும் காலை,-திணைக்கு உரிப்பொருளே
     
    17. 'கொண்டு தலைக்கழிதலும், பிரிந்து அவண் இரங்கலும்,
    உண்டு' என மொழிப, 'ஓர் இடத்தான' உரை
     
    18. கலந்த பொழுதும் காட்சியும் அன்ன
     
    19. முதல் எனப்படுவது ஆயிரு வகைத்தே
    - தொல்காப்பியம் - அகத்திணையியல் - நூற்பாக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.