தி வொண்டர் தட் வாஸ் இந்தியா
தி வொண்டர் தட் வாஸ் இந்தியா (The Wonder That was India) என்பது ஏ. எல். பசாம் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் பண்டைய இந்தியாவின் சிறப்புக்களை, குறிப்பாக வரலாறு, கலை, மரபு, சமூகம் முதலான விடயங்கள் பற்றிப் பேசுவதாக அமைகின்றது. இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதனுடைய முதற்பாகத்தின் இரண்டாம் பதிப்பு 1963இல் வெளியிடப்பட்டதுடன் இந்நூல் பல தடவைகள் பதிப்பிக்கப்பட்டது.

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகம் 1986ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
பசாமால் எழுதப்பட்ட முதலாம் பாகத்தில் பண்டைய கால இந்தியா முதலாக முசுலிம்களின் வருகை வரையான தகவல்கள் உள்ளன. இரண்டாம் பாகம் 1200-1700 வரையான ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
வியத்தகு இந்தியா என்னும் தலைப்பில் இந்நூல் தமிழில் செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டினன் என்பவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.