தாரணி
தாரணி(धारणी) என்பது ஒரு விதமான புனித சொற்கோர்வை ஆகும். இந்த சொற்கோர்வை சடங்குகளிலும், சில செயலகள் நடைபெற வேண்டியும் இது உச்சாடனம் செய்யப்படும். மந்திரங்களும் தாரணியும் நெருங்கிய தொடர்புடைய சில சமங்களில் ஒத்த பொருளைடைய சொற்களாகவே கருதப்படுகின்றன. எனினும் இவ்விரண்டின் பயன்பாடு வேறு வேறு ஆகும்.
ஜப்பானில் ஷிங்கோன் பௌத்தத்தை நிறுவுன கூக்காய் தாரணியையும் மந்திரங்களையும் இவ்வாறாக வேறுபடுத்துகின்றார். மந்திரங்கள் பௌத்த மறைபொருள்(esoteric) சடங்குகளில் பயன்படுத்த வேண்டியவை. அப்படியுருக்க, தாரணிகளில் எல்லா பௌத்த சடங்குகளிலும் பயன்படுத்த இயலும். தாரணிகள் பாளி சூத்திரங்களிலும் காணப்படுகின்றன.
தாரணி(धारणी) என்ற சொல் திரு(धृ)என்ற சொல்லில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. திரு(धृ) என்றால் பெற்றிருத்தல்,வைத்திருத்தல் என்று பொருள். எனவே தாரணி என்பது ஒரு சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் தன்னுள் அடக்கிய வாக்கியம் என கருதாலம். தாரணிகள் பொதுவாக நண்மைகள் நடைபெறவும் இன்னல்களிலிருந்து விடுபடவும் உச்சாடனம் செய்யப்படுகின்றன.
தாரணிகளையும் மந்திரங்களையும் வேறுபடுத்துதல் மிகவும் கடினம். அனைத்து மந்திரங்களையும் தாரணிகள் எனக்கொள்ளலாம் ஆனால் அனைது தாரணிகளையும் மந்திரங்கள் எனக்கொள்ள இயலாது. மந்திரங்கள் பொதுவாக குறைவான அளவுடையவை மேலும் அதிகமாக நேரடிப்பொருளற்ற எழுத்துக்களையும் சொற்களையும் கொண்டிருப்பவை. உதாரண்மாக, ஹூம், பட், ஹ்ரீ:,த்ராம் போன்றியவைகளை குறிப்பிடலாம். கூக்காய் மந்திரஙக்ளை தரணிகளின் ஒரு சிறப்பு வகையாக கருதினா. அவரைப்பொருத்த வரையில் தாரணியின் ஒவ்வொரு எழுத்தும் உணமையின் வெளிப்பாடாகும்.
(எ.டு) அவலோகிதேஷ்வரரின் ஆர்ய ஏகா தசமுக தாரணி(பொருள்:உயரிய பதினோருமுக தாரணி. திபெத்தியர்களின் மஹாகருணா தாரணி)
நமோ ரத்னத்ர்யாயே நம: ஆர்யஜ்ஞான சாகர வைரோசன வ்யூஹராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்ஸம்புத்தாய:
நம: ஸர்வ ததாகதேப்ய: அர்ஹதேப்ய: சம்யக்ஸம்புத்தேப்ய:
நம: ஆர்ய அவலோகிதேஷ்வராய போதிசத்த்வாய மஹாசத்த்வாய மஹாகருனிகாய:
தத்யதா: ஓம் தர தர திரி திரி துரு துரு இதியே விதியே சலே சலே
ப்ராசலே குசுமே குசும்வரயே இலி மிலி ஜ்வாலம் அப்னயே ஸ்வாஹா
இவற்றையும் பார்க்கவும்
- பௌத்த மந்திரங்கள்
- ஜுவால மந்திரம்