தாய் மாமன்

தாய் மாமன் தமிழர் பண்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய உறவு முறையாகும். இது தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம்.

சடங்குகளில் முக்கியத்துவம்

தொட்டிலிடுதல்

குழந்தை பிறந்ததும் தாய் மாமன் தொட்டில் கம்பு, தொட்டிற் சீலை அல்லது தொட்டில் முண்டு போன்றவற்றைக் கொண்டுவந்து தொட்டில் கட்டி குழந்தையைக் கிடத்தி மூன்றுமுறை ஆட்டிவிடும் வழக்கம் பல குடும்பங்களில் உண்டு.[1][2]

காது குத்துதல்

காது, மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம் பூட்டுவதற்கு தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது.

பாடல் வரிகள்;

கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா

காதுகுத்தப் போறாகன்னு கிண்ணியில் சந்தனமும் கிளிமூக்கு வெத்தலையும் தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு

கொண்டு வந்தார் தாய்மாமன்

பூப்புச் சடங்கு

ஒரு பெண் குழந்தை பருவம் அடைந்து விட்டால் தாய் மாமன் சீர் கொண்டு வந்து பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டும் வழக்கமும் தமிழகத்தில் உள்ளது.

தாய்மாமன் சீர்" தங்கை மகள் பூப்பெய்திய(வயதுக்கு வந்ததும்) தாய் வீட்டுசீர்வரிசையாக(மஞ்சள், குங்குமம்,வெற்றிலை பாக்கு, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் மேலும் பலசகல பொருட்கள் அன்றயதினம் தேவையான) தாய்மாமன் உறவு வழங்குவது தமிழர் மரபுவழி வாழ்வியல் பண்பாட்டு கலாச்சார சடங்கு சம்பிரதாய வழக்கம் இதுவே.

  மருமகள் பூப்பெய்திய புனித நீராட்டு விழா எடுப்பது தாய்மாமன்முறை என்பது எம் தமிழர் மரபின் வழிசம்பிரதாயம்...!!

பட்டம் கட்டுதல்

திருமணத்தில் தாலி கட்டிய பிறகு தாய் மாமன் திருமணப் பெண்ணுக்கு நெற்றிப் பட்டம் கட்டுவார். பட்டம் கட்டுதல் என்பது உரிமை கொடுப்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

தமிழ் திரைப்பட பாடல்களில்

'நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்

'தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி'

மேற்கோள்கள்

  1. வாழ்க்கை வட்டச் சடங்குகள்
  2. யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் – 31 ஆம் 41 ஆம் நாட்சடங்கு
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.