தாயகம் (இதழ்)

தாயகம் இலங்கையிலிருந்து வெளிவரும் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்

தாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்

அறிமுகம்

தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக 1974இல் சித்திரையிலிருந்து நான்கு இதழ்கள் வெளிவந்து பின் தாயகம் 1983 ஏப்ரலிலிருந்து இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். நாட்டு போர் சூழலில் இடைவெளி இருப்பினும் இன்றும் தொடர்ந்து கலை இலக்கிய சமூக விஞ்ஞான காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதன் பிரதம ஆசிரியராக க. தணிகாசலம் இயங்கி வருகின்றார். இது மார்க்சியச் சிந்தனையை நாட்டு நடப்போடு பொருத்தி விளக்கிய முற்போக்குப் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றது. சமூக நோக்கோடு எழுதப்படும் கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், சமூக விஞ்ஞான கட்டுரைகள் என்று பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றுவருகின்ற இதழாக உள்ளது. தாயகம் இதழில் வெளிவந்த கவிதைகள் தொகுக்கப்பட்டு தாயகம் கவிதைகள் 66 எனும் தலைப்பில் வெளிவந்தன.

மகுட வாசகம்

புதிய ஜனநாயகம், புதிய பண்பாடு, புதிய வாழ்வு

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழுவில் மறைந்த கவிஞர் முருகையன், மாவை வரோதயன், கல்வயல் வே. குமாரசாமி ஆகியோர் மறையும் வரை அங்கம் வகித்துள்ளனர். தற்போதைய ஆசிரியர் குழுவில் சி. சிவசேகரம், குழந்தை ம. சண்முகலிங்கம், சோ. தேவராஜா, அழ. பகீரதன், ஞாலசீர்த்தி மீநிலங்கோ, வே. தினகரன், நிலா, ஆதித்தன் ஆகியோர் அடங்கியுள்ளனர். நிர்வாக ஆசிரியர் சத்தியதேவன்

முகவரி

  • ஆசிரியர், ஆடியபாதம் வீதி, கொக்குவில், இலங்கை
  • மின்னஞ்சல் முகவரி : thajaham@gmail.com

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.