தாமப்பல்கண்ணனார்
தாமப்பல் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது புறநானூறு 43 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. அப்பாடலில் இவர் தன்னை ஒரு பார்ப்பனன் என்று கூறிக்கொள்கிறார். [1]
அடிக்குறிப்பு
- தாமப்பல் கண்ணனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
-
ஆர்புனைத் தெரியல் நின் முன்னோர்
பார்ப்பார் நோவன செய்யார், மற்று இது
நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் - புறநானூறு 43 -
'கூர் உகிர்ப் பருந்தின் எறு குறித்து ஒரீஇத்,
தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
தபுதி அஞ்சிச் சீரை புக்க,
வரையா ஈகை உரவோன்' -
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர
தெருகதிர்க் கனலி வெம்மை தாங்கி
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர் சடை முனிவரும் மருள -
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்
தேர் வண் கிள்ளி