தானே செய்தல்

தானே செய்தல் என்பது பல பணிகளை வேலையாள் வைத்து செய்யாமல் தானே செய்வதைக் குறிக்கிறது. சமைத்தல், தைத்தல், துப்பரவாக்கல், திருத்துதல், கைவேலை, தளபாடங்கள் செய்தல், ஓவியம் இசை போன்ற கலைகள், வலைத்தளம் என பல தரப்பட்ட செயற்பாடுகளை தாமே செய்வதைக் இது குறிக்கிறது. இது மேற்குநாடுகளில் Do It Yourself (DIY) என அறியப்படும் ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது.

பலன்கள்

பணம் சேமிப்பு

பல வேலைகளை தாமே செய்வதால் அதற்கு ஒருவருக்கு கொடுக்கும் ஊதியம் சேமிப்பாகிறது.

திறன் கற்றல்

தாமே பல பணிகளை செய்ய முயற்சி செய்கையில் அந்தப் பணிகளுக்கு தேவையான திறங்கள் விருத்தி செய்யப்படுகிறது.

செயலில் நிறைவு

பலர் செயற்பாடுகள் ஆவற்றின் விளைவில் மட்டும் அல்லாமல், செயற்பாட்டிலும் நிறைவைத் தருவனதாக அமைகின்றன.

எடுத்துக்காட்டுக்கள்

  • தோட்டம் - உணவு உற்பத்தி
  • தையல் - உடை உற்பத்தி
  • மரவேலை
  • தானுந்து/இலத்திரனியல் பொருட்களைத் திருத்துதல்
  • பதிப்பித்தல்

அரசியல் நிலைப்பாடுகள்

வேலைகள் சிறப்புத் தகுதி பெற்றறோர் மட்டுமே செய்ய முடியும் என்ற சூழ்நிலைக்கு எதிரான ஒரு போக்கை தானே செய்தல் என்ற இந்த நிலைப்பாடு முன் நிறுத்துகிறது. கம்பனிகள் தொழிலை கலைகளை தனிநபர்கள், அல்லது தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து சுரண்டுவதற்கு எதிரான ஒரு நிலைப்பாடக இது கொள்ளப்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.