தான எழுத்துமுறை

தான எழுத்துமுறை (ތާނަ)‎ என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தான (ތާނަ)
வகை அபுகிடா
மொழிகள் திவேயி மொழி
காலக்கட்டம் {{{time}}}
மூல முறைகள் இந்து-அரபு எண்ணுருக்கள் (மெய்யெழுத்துகள்)
அரபு குறியீட்டுக்கள் (உயிரெழுத்துகள்)
தான (ތާނަ)
ஒருங்குறி அட்டவணை U+0780–U+07BF
ஐஎஸ்ஓ 15924 Thaa

முதலில் பிராமி குடும்பத்தை சேர்ந்த திவேஸ் அகுரு எழுத்துமுறையை திவேயியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக தான எழுத்துமுறை இதற்கு மாற்றாக வழக்கத்தில் வந்துள்ளது.

எழுத்து வடிவங்கள்

உயிர் எழுத்துக்கள்

உயிர் எழுத்து'க'கர உயிர்மெய் ஒத்த தமிழ் எழுத்துIPAகுறிப்பு
އަ‎ކަ (க)aஅபஃபிலி
އާ‎ކާ (கா)ஆபாஃபிலி
އި‎ކި (கி)iஇபிஃபிலி
އީ‎ކީ (கீ)ஈபீஃபிலி
އުކު (கு)uஉபுஃபிலி
އޫ‎ކޫ (கூ)ஊபூஃபிலி
އެ‎ކެ (கெ)eஎபெஃபிலி
އޭ‎ކޭ (கே)ஏபேஃபிலி
އޮ‎ކޮ (கொ)oஒபொஃபிலி
އޯ‎ކޯ (கோ)ஓபோஃபிலி

மெய்யெழுத்துக்கள்

சொந்த மெய்யெழுத்துக்கள்

தான எழுத்துதான பெயர்ஒத்த தமிழ் எழுத்துIPA
ހஹாh
ށஷவியானிʃ
ނநூநு
ރ‎ராɾ
ބ‎பாப - க'ப'ம்b
ޅளவியானிɭ
ކகாஃபுk
ވவாவுʋ
މ‎‎மீமுm
ފ‎ஃபாஃபுஃபf
ދ‎தாலுத-ம'த'ம்
ތதா
ލ‎லாமுl
ގகாஃபுக-ம'க'ன்ɡ
ޏஞவியானிɲ
ސ‎ஸீனு
ޑ‎டவியானிட-ம'ட'ம்ɖ
ޒஸவியானிஃஸ (தமிழில் இல்லாத ஒலிப்பு)
ޓ‎டவியானிʈ
ޔயாj
ޕபவியானிp
ޖஜவியானி
ޗ‎சவியானி

அரபு மெய்யொலிகளை எழுதுவதற்கான மெய்யெழுத்துக்கள்

தான எழுத்துதான பெயர்ஒத்த அரபு எழுத்துIPA
ޘ‎த்தாث‎θ
ޙ‎ஹ்ஹாح‎ħ
ޚ‎க்காخx~χ
ޛதாலுذð
ޜ‎ஃஸாʒ
ޝ‎ஷீனுش‎ʃ
ޞ‎ஸாதுص‎
ޟ‎‎தாதுض‎
ޠ‎‎தோط
ޡ‎ஃஸோظ‎ðˁ~zˁ
ޢ‎அயினுع‎ʕ
ޣ‎‎கயினுغ‎ɣ
ޤ‎காஃபுق‎q
ޥ‎‎வாவுو‎w

சிறப்பு எழுத்துக்கள்

தான எழுத்துதான பெயர்செயற்பாடு
އஅலிஃபுஉயிரெழுத்தை தனியாக எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது
އްசுகூன்இவ்வெழுத்துக்கு பிறகு வருகிற மெய்யொலியை அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்று குறிக்கும்
ޱ‎ணவியானி'ண'கரத்தை குறிக்கிற எழுத்து. இப்பொழுது வழக்கத்தில் இல்லை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.