தாக்க காரணி

தாக்க காரணி (Impact factor) என்பது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரை இதழ்களில் வெளியாகும் பதிப்புகளை சார்ந்த மதிப்பீடாகும். இது பல்வேறு துறை சார்ந்த ஆய்விதழ்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதை மதிப்பிடவும் பயன்படுகிறது. யூச்சீன் கார்ஃபீல்டூ( Eugene Garfield) என்பவர் இதை உறுவாக்கினார். இவர் அறிவியல் அறிதல் நிறுவனம் (Institute for Scientific information) என்ற நிறுவனத்தை நிறுவினார். அது இன்று தாம்சன் ராய்ட்டர்சு (Thomson Reuters) என்னும் குழுமத்தின் பங்காக இருந்துவருகிறது. தாக்க காரணியை ஆண்டுதோறும் தாமசு ரியுட்டர்சு ஆய்விதழ் மேற்குறிப்பறிக்கையில் இணையும் ஆய்விதழ்களுக்குக் கணக்கிடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஒரு ஆய்விதழில் வெளியான ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சராசரியாக எவ்வளவு முறை (பிற ஆய்வுக் கட்டுரைகளில்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பதே அந்த இதழின் அவ்வாண்டுக்கான தாக்க காரணியாகக் கொள்ளப்படும். எடுத்துக் காட்டாக, ஓர் அறிவியல் இதழில், 2006-இல் n1 கட்டுரைகளும், 2007-இல் n2 கட்டுரைகளும் வெளியாகி இருந்து, அந்த n1 கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k​​​1 தடவையும், n2 கட்டுரைகளில் ஏதேனும் ஒருசிலவாவது k2 தடவையும் மற்ற ஆய்வாளர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டால்,

2008-இல், தாக்கக் காரணி = (k1 + k2)/(n1 + n2)

என்று கணிக்கப் படும்.


மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.