தலையூர் காளி
கொங்கர்கள் வாழ்கின்ற நாடாம் கொங்கு நாட்டிலே போர்க்களம் புகுந்து காவு கொள்ளும் கொங்கு வேட்டுவ கவுண்டர் குலத்திலே வாளோடு தோன்றிய வெற்றித் திருமகன்.எதிரிகளை புற முதுகிட்டு ஓடச் செய்யும் வல்லாண்மை பொருந்திய வல்லவன். போர்க்களத்தின் தெய்வமான காளியை(கொற்றவையை) குல தெய்வமாக கொண்ட கொங்கு வேட்டுவக் கவுண்டர் தலைவன். 24 கொங்கு நாட்டில் ஒன்றான தலையூர்.அத்தலைய நாட்டின் தலைவன் காளி கவுண்டர் .தலையூர் காளி கவுண்டர்எ ன்பவன் 24 கொங்கு நாடுகளுக்கும் தலைநகராக விளங்கிய தலையூரை ஆண்ட அரசன். கொங்கு நாட்டின் வீர வரலாற்றில் தவறாது இடம் பெற்றிருப்பவன். இவன் ஒட்டு மொத்த கொங்கு வேட்டுவக் கவுண்டர் தலைவனாக அறியப்படுகிறான். மேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.மேலும் சிறந்த வீரன் என போற்றப்படுபவர். இத்தலையூர் ஆனது இன்றைய சின்னத் தாராபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
காளி அருளால் வளர்க்கப்பட்டவன்.நாடு தலையூர்.தலையூர்+காளி=தலையூர்காளி. காளி தலையநாட்டு பட்டக்காரர் வம்சாவளி எனக் குறிப்பிடுவர்.இன்றும் தலையநாட்டு பட்டக்காரர் மரபு பின்பற்றப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
தலையூரை தலைநகராக கொண்டு ஆண்ட வேட்டுவ கவுண்டர் இன மன்னனின் மகன் ஆவான்.தலையூர் காளி மன்னன் வில்லாற்றலில் கடையநெடு வேட்டுவனை நினைவுக்கு கொண்டு வருபவன். கடையநெடு வெட்டுவனின் வழித் தோன்றலே இந்த தலையூர் காளி மன்னன். இவன் தலையூரில் உள்ள பிரம்ம காளித் தேவி அம்மனை குலதெய்வமாக கொண்டவன்.
இளமை
பருத்த தோளோடும் வாளோடும் சீராட்டி வளர்க்கப்பட்டான் இந்த வேட்டுவக் கவுண்டர் மன்னன்.இவனை மக்கள் தலையூரான் என விரும்பி அழைத்தனர். இவன் இளவயதிலே தனக்கென ஒரு படையை தந்தையிடம் வாதிட்டு பெற்று நிருவகித்து வந்தான். அப்படையானது தலையூரான் படை என்றும் காளி கவுண்டர் சேனை என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தது.மாட மாளிகையில் வேட்டுவக் கவுண்டர் குலத்தில் பிறந்த மாவீரன் என மக்கள் அவனை போற்றினர்.ஒரு முறை காட்டிற்கு வேட்டையாட சென்றபொழுது இரண்டு புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டான். உடன் சென்றோரோ இளவரசன் ஆயுள் முடிந்துவிட்டது என கூறுமாறு பணியாள் ஒருவன் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
வீரம்
இரண்டு புலிகளுக்கு நடுவே பயமறியாது பாயும் வேங்கை போல நேர்கொண்ட பார்வையுடன் புலியை எதிர்த்து நின்றான்.உடன் சென்றவர்கள் இதுபோன்று மனவலிமை கொண்ட ஒரு கொங்கனை கண்டதில்லை என எண்ணி வியந்து செய்வதறியாது நின்றனர்.ஒரு கையில் தன் முன்னோர்களின் மிக முக்கிய ஆயுதமான தண்டெறியும்(3 முதல் 5 அடி நீளம் கொண்ட குத்து ஈட்டி) மறு கையில் ஒளி பொருந்திய கூர்மையான வாளும் கொண்டு வேங்கை வேட்டையாட நிற்பதுபோல நின்றான். வலது புறத்திலிருந்த புலி பாய்ந்து காளி முதுகை பிளக்க முயன்றது. முதுகில் புண்படுதலோ தற்கொலை செய்தலோ வீரமற்ற கோழைகளின் செயல் என்பதை நன்கு அறிந்த காளி தனது மார்பை வலப் பக்கம் திருப்பி கையொன்றில் இருந்த தண்டெறியால் புலியின் மார்பிலே குத்தி தனது கையினால் அப்புலியை தாங்கி நின்றான். மறு கையில் கொண்ட வாளால் மற்றொரு புலியை நோக்கி வீசினான். அவ்வாளானது அப்புலியின் தலையினை கண் இமைக்கும் கணத்தில் அதன் உடலிலிருந்து பிரித்தது. அன்று முதல் அவன் புலிக்குத்தி என்னும் பட்டத்துடன் அழைக்கப்பட்டான்.
சிறப்பு
வீரப்பூர் போர்க்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர். அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய வீரர் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர். போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து கதைப்பாட்டு எழுதிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகள் 90% விழுக்காடு வரலாற்று சம்பந்தம் இல்லாதவை.
தலையூர்ப் படைகள் வளநாடு நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வளநாட்டு படை தலையூர்ப் படையை வளநாட்டிற்குள் புகவிடாமல் வீரப்பூர் காட்டில் தடுத்து நிறுத்தி போர்தொடுத்தது. போரின் முடிவில் வளநாட்டு படை முழுவதும் முறியடிக்கப்பட்டது.படுகளம் பகுதியில் மேடான பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டு முன்னரே அழிந்து போன படை போக மீதியிருந்த படை வீரர்களுடன் பொன்னர் சங்கர் சுற்றி வளைக்கப்படவே தப்பி ஒடமுடியாத இட அமைப்பும், படைக்குறைவும் ஏற்படவே எதிரிகள் கையில் சிக்காமல் இருக்க மூவரும் வாளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தான் உண்மை. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தும் இதுவே.
படுகளத்தில் இருந்து நேர் கோட்டில் பார்தாலே 20 கி.மீட்டர் அப்பால் வரும் படையின் தூசி, வேல்கள் மின்னுவதை வைத்து படைகள் வரும் திசை , தொலைவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். இதை அடிப்படையாக வைத்துத்தான் வளநாட்டுப்படைத் தலைமை இந்த மேடான பகுதியில் படையை நிறுத்திக்கொண்டு தலையூர் படைக்காக காத்திருந்தது. தலையூர்ப்படைக்கும், வளநாட்டுப் படை நின்ற இன்றைய கூவனாம் பள்ளத்திற்கு அருகே போர் மூண்டது.இந்த போர் பற்றி எந்த குறிப்புக்களோ, கல்வெட்டோ,செப்பேடு பட்டயமோ இல்லை. எந்த ஆவணங்களும் இல்லை.
போர் நடந்து முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பின்னர் எதை வைத்து எழுதியிருக்க முடியும்.? கள்ளழகர் அம்மானையும்,
போரின் முடிவைத்தெரிந்து கொண்டு பொன்னர்,சங்கர் மனைவியர் தீயிட்டு இறந்து விடுகிறார்கள்.எஞ்சிய அருக்காணி மட்டும் பாசத்தால் அண்ணமார்களின் உடலைக்காண படுகளம் வருகிறாள். படுகளம் வந்து உடலைக்கண்டபின் முத்தரைய போர் வீரர்களின் உதவியோடு படுகளத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அருக்காணியும் துயரம் மிகுந்து, அழுது அழுது படுகளத்திலேயே இறந்து விடுகிறாள்.
அருக்காணியை வளநாட்டில் இருந்து அழைத்து வந்த முதல் உடல் அடக்கம் செய்தது வரை பொன்னர் சங்கர் குடும்பத்தினர் மீது ஆழ்ந்த பற்றுவைத்திருந்த முத்தரையர்களே.
இந்த போரில் வாங்கிய வரத்தின் படி அண்ணன்தான் முதலில் இறந்த்தாக கதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ சங்கர்தான் முதலில் இறப்பதாக உண்மையைச் சொல்லிவிட்டார்கள். பொன்னர்தான் முதலில் இறந்த்தைத்தான் வரத்தின்படி கதை எழுதுவோர் சொல்லியிருக்கவேண்டும். பொன்னருக்குத்தான் முதலில் 16 வயது முடியும்.ஆனால் தம்பி சங்கர்தான் முதலில் இறப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே பொன்னர் தன்னந்தனியே குதிரை ஏறி கொங்கு 24 நாட்டில் உள்ள வேட்டுவக் கவுண்டர் எல்லாம் வெட்டிக்கருவறுத்ததாகவும், வந்த பின் வாளில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறுகின்றனர். 24 வேட்டுவரை கருவறுத்த பின்னர் பொன்னர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.
18 நாட்டு வேட்டுவக் கவுண்டர் படையும் தலையூர் காளி கவுண்டர் தலைமையில் வீரப்பூரில் போரிட்டுக்கொண்டு இருக்கும்போது பொன்னர் எதற்காக கொங்கு நாட்டிற்கு 140 கி.மீட்டர் மேற்கு நோக்கிச்செல்லவேண்டும். படைகளை எதிர்த்து வீரப்பூரில் போரிட்டு கருவறுத்து இருக்கலாமே. 500 வருடத்திற்கு முன்னாடி கள்ளழகர் அம்மானையும், பிச்சனும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை எழுதியிருக்கிறார்கள்.இன்றைக்கு அவர்கள் இருந்திருந்தால் ஆஸ்கார் அவார்டே வாங்கியிருப்பார்கள்.
வளநாட்டு படைக்கும், தலையூர் காளி கவுண்டர் படைக்கும் போர் நடக்க என்ன காரணம் என்று கள்ளழகர் அம்மானையிலும் இல்லை. பிச்சன் எழுதிய அண்ணமார் சாமி கதையிலும் தெளிவான காரணம் எதுவும் கூறப்படவில்லை.வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி எல்லைச்சண்டையாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
கருணாநிதியார் எழுதிய பொன்னர் சங்கரில் தலையூர்காளியை பொன்னர் வாளால் நெஞ்சில் தாக்கி கொல்லப்படுவதாக எழுதியிருக்கிறார். இதில் சிறிதும் உண்மையில்லை.வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.போரின் முடிவில் வென்றது தலையூர்காளிதான். இயற்கையான மரணம் வரும்வரை வாழ்ந்திருக்கிறார். தலையூர் காளி பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கலைஞர் சிலரை திருப்த்தி படுத்துவதஅண்ணன்மார் என்ற கதை உண்மையை கூறாமல் தவறான கருத்துக்களை பதிவு செய்துள்ளது. பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கோளாத்தா கவுண்டர் எனும் கொங்கு வேளாள கவுண்டருக்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளியை எதிர்த்து போரிட்டு வீழ்த்தியதாக அண்ணன்மார்க் கதை கூறுகிறது. ஆனால் அதற்கு எந்த சான்றுகளும் இல்லை, உண்மையில் போரில் தலையூர் காளி வெற்றி பெற்றதும் பொன்னர் சங்கர் தற்கொலை செய்து கொண்டனர். வேட்டுவ கவுண்டர்களின் மாமன்னர் தலையூர் காளி மன்னன் வெற்றியுடன் தலைநாடு திரும்பினான்.
மாசித் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தலையூர் காளி கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. போரில் தலையூர் காளி பொன்னர் சங்கர் இருவரையும் வென்றதால் தலையூரில் இது மாசி திருவிழாவாக நடந்து வருகிறது. அன்றுமுதல் ஆண்டு தோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. போரில் வென்ற வெற்றியின் அடையாளமாக இவ்விழா கருதப்படுகிறது.