தலைகீழ் ஜென்னி
தலைகீழ் ஜென்னி என்பது 1918 இல் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்ட ஒரு தபால்தலை ஆகும். இதில் இதன் வடிவமைப்பின் நடுவில் உள்ள ஆகாய விமானம், தவறுதலாகத் தலைகீழாக அச்சிடப்பட்டுவிட்டது. இந்தத் தபால்தலை உலகம் முழுவதிலும் 100 மட்டுமே இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் இது உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த தபால்தலைகளுள் ஒன்றாக விளங்குகின்றது. 2003 ஆம் ஆண்டின் மதிப்புப்படி இதன் பெறுமதி 150,000 அமெரிக்க டாலர்களாகும்.
தலைகீழ் ஜென்னி | |
---|---|
![]() தலைகீழ் ஜென்னியின் இந்த மாதிரி சிமித்சோனியன் தேசிய தபால்சேவை அருங்காட்சியகத்தில் (National Postal Museum) உள்ளது | |
வெளியிட்ட நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பதிப்பித்த இடம் | |
பதிப்பித்த திகதி | மே 10, 1918 |
அருமையின் தன்மை | தலைகீழ் வழு |
இருக்கக்கூடிய எண்ணிக்கை | 100 |
குறித்த பெறுமானம் | 24¢ |
கணிக்கப்பட்ட பெறுமானம் | US$150,000 |
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.