தற்காலிக மரபணு வெளிப்படுதல்

தற்காலிக மரபணு வெளிப்படுதல் (transient gene expression) என்பது மூலக்கூற்று உயிரியலில் பயன்படும் ஒரு சொல். ஒரு மரபணுவை செயற்கையாக சில நாட்களுக்கு மட்டும் வெளிப்படுத்தும் செயலே தற்காலிக மரபணு வெளிப்படுதல். மரபணுவை பயிர் அல்லது விலங்கு உயிரணுக்களில் நிலையாக நிறப்புரியில் சேர்ந்து நிலைத்த வெளிப்பாடு செய்வதும் உண்டு.பயிர் இலைகளிலோ (leaves) அல்லது விலங்கு உயிரணுக்களிலோ (cells) உள்-செலுத்தப்படும் மரபணுக்கள் அதனை சுற்றி உள்ள கலங்களின் நிறப்புரியில் (chromosome) இணையும் தன்மையைக் கொண்டு இருக்கும். ஒரே உயிரணுவில் உள்ள நிறப்புரியில் பல இடங்களில் இவை இணைவதால், இவற்றின் நகல் எண்ணிக்கை பலவாக(copy number) இருக்கும். இதனால் புரத வெளிப்பாடு மிகைப்படுத்தப்பட்டு அதன் அளவு கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்புகள் கூட்டப்படுகின்றன.

தாவர இலையில் தற்காலிக மரபணு வெளிப்படுத்தலை ஆய்வு முறையை விளக்கும் படம். இம்முறையில் மாற்றப்பட்ட பயிர்நோய்க் கோலுயிரியில் (Agrobacterium) நாம் மிகையாக்க விரும்பும் புரதத்துக்கான மரபணு பகுதிகளை மூன்று இணைவு (tri-parental mating) அல்லது பயிர்நோய்க் கோலுயிரி உருமாற்றம் (Agrobacterium transformation) என்னும் நுட்பம் மூலம் உள் செலுத்தப்படும். பின் இவை வளர்க்கப்பட்டு படத்தில் உள்ளது போல் இலையில் செலுத்தப்படும். வெளிப்படும் புரதம் முதல் மூன்று நாட்களுக்கு கூடுதலான இருக்கும்.

தற்காலிக வெளிப்படுதலில் (transient expression) ஒரு மரபணு வெளிப்படும் தன்மை முதல் மூன்று நாட்களில் உச்ச அளவிலும் பின் குறைந்து ஏழாம் நாளில் வெளிப்பாடு நின்றும் விடும். ஏனெனில் பயிர் மற்றும் விலங்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு அரண்கள், செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் மரபணுவை ஒரு அயல் பொருளாக கருதி அவற்றை மரபணு ஒடுக்குதல் (gene silencing) என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தி தடுத்துவிடும். இந் நிகழ்வை பயிரில் மரபணு ஒடுக்குதல் (post-transcriptional gene silencing) என்றும், விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் (RNA interference) என்றும், பூஞ்சையில் கொல்லுதுதல் (quelling) என்றும் சுட்டப்பெறும்.

விலங்கு உயிரணுவில் தற்காலிக மரபணு வெளிப்படுத்தலை விளக்கும் படம். இம்முறை விலங்கு உயிரணு உள்-செலுத்துதல் (transfection) எனலாம். இம்முறையில் நாம் வெளிப்படுத்த விரும்பும் மரபணுவை படிவாக்கம் (cloning) செய்து, அவை கொழுப்பு பொருள்களில் (lipid based) கலக்கப்படும். பின் இவை அரைமணி நேரம் வைக்கப்பட்டு, உயிரணுக்களில் செலுத்தப்படும்

தற்காலிக மரபணுவை வெளிப்படுத்தும் நுட்பம்.

  • ௧. அக்ரோ- செலுத்துதல் (Agroinfiltration) (பயிர்களின் இலையில்)
  • ௨. மாற்றப்பட்ட தீ நுண்மங்கள் மூலமாக (பயிர்களிலும் மற்றும் விலங்கு)
  • ௩.உள்-செலுத்துதல்(transfection) (விலங்கு உயிரணுக்களில்)

நிலையான மரபணு வெளிப்படுத்தலுக்கு பல நுட்பங்கள் பயிர் மற்றும் விலங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை,

  • ௧. அக்ரோபக்டேரியம் உருமாற்றம்-Agrobacterium plant transformation (பயிர்களில்)
  • ௨.துகள் தாக்கும் முறை- particle bombardment
  • ௩. நுண் செலுத்துதல்- micro-injection

இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட உயிர்களால் பலவித கவலைகளும் குற்றசாட்டுகளும் சொல்லப்படுகின்றன. குமுகவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் கவலைகளை தீர்ப்பதற்கு பல வகையான நுட்பங்களும் வந்து கொண்டு இருக்கின்றன (எ.கா. தேர்தெடுக்கும் முகவர் இல்லாத பயிர்கள், marker free plants). மிகப்பெரிய பின்னடைவு என்பது தீ நுண்ம எதிர்ப்பு பயிர்கள். இவற்றை மீண்டும் தாக்கும் நுண்மங்கள் படிப்படியாக பயிரின் நோய் எதிர்ப்பு தன்மையை உடைத்து பெரிய அளவில் அறுவடைக்கு இழப்பை ஏற்படுத்த வல்லன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.