தரவு இனம்

தரவு இனம் (Datatype or Type) எவ்வாறு ஒரு தரவு வகைப்படுத்தப்பட்டுகின்றது என்பதை குறிக்கின்றது. ஒரு தரவை நினைவகத்தில் எப்படி சேகரிப்பது, எவ்வகையான செயல்பாடுகளை தரவுகள் மீது மேற் கொள்ளலாம், ஒரு தரவை நிரலாக்கத்தில் என்கே பயன்படுத்தலாம் ஆகியவற்றை தரவு இனம் தீர்மானிக்கும்.

பொதுவாக பயன்பாட்டில் உள்ள தரவு இனங்கள்

  • boolean
  • int
  • float
  • char
  • string
  • double

தரவு இனச் சோதனை (Type Checking)

ஒத்தியங்ககூடிய தரவு இன (compatible type) செயல் ஏற்பிகளுக்கிடையேதான (operands) செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கையே தரவு இனச் சோதனை ஆகும். நிரலாக்கத்தில் தரவு இனச்சோதனை ஒரு முக்கிய அம்சம். எவ் இனங்கள் ஒத்தியங்ககூடியது என்பதை நிரல் மொழியின் இலக்கணமே வரையறை செய்கின்றது.


தரவு இனச்சோதனை இரு வகைப்படும். அவை static type checking, மற்றும் dynamic type checking என்பனவாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.