தமிழ் நேசன் (மலேசிய இதழ்)

தமிழ் நேசன் (Tamil Nesan) என்பது மலேசியாவில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் செய்திப் பத்திரிகை ஆகும். 94 ஆண்டுகள் செயல்பாட்டு வந்த இந்த இதழ் பொருளாதாரப் பற்றாக்குறையால் 2019 பிப்ரவரி 1 ஆம் நாள் முதல் தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது.[1]

முதல் பதிப்பு

மலேசியாவின் பழமையான செய்தித்தாளான தமிழ்நேசன் 1924 ஆம் ஆண்டு முதல் வெளிவருகிறது. தமிழ்நேசனின் முதல் இதழ் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் வெளியிடப்பட்டது.[2][3]

செய்திகள்

தமிழ்நேசன் செய்தித்தாள் மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்களால் வெளியிடப்பட்டது. மலேசியாவில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப்பட்டது. தமிழ்நேசன் செய்தித்தாள் பல்வேறு வகையான செய்திகளை வாசகர்களுக்காக வெளியிட்டது. அரசியல், மதம், நாடு, உலகம், கல்வி மற்றும் தமிழ் திரைப்படங்கள் பற்றிய செய்திகள் இவற்றில் உள்ளடங்கும். இது மலேசியாவில் தோராயமாக தினமும் 20000 பிரதிகளை வெளியிட்டது.

மேற்கோள்கள்

  1. "Tamil Nesan to cease operations on Feb 1". டெய்லி எக்ஸ்பிரஸ். http://dailyexpress.com.my/news.cfm?NewsID=130992. பார்த்த நாள்: 1 February 2019.
  2. "About Us". Tamil Nesan. பார்த்த நாள் 25-03-2011.
  3. "Tamil Nesan ‘the oldest Tamil daily’ - Nation - The Star Online". பார்த்த நாள் 12-08-2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.