தமிழ்நாட்டு ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள்

இலங்கையில் இடம்பெறும் தமிழருக்கு எதிரான வன்செயல்களைக் கண்டித்தும், தமிழர்களின் உரிமை - சுயநிர்ணய போராடாத்தை ஆதரித்து பல்வேறு தமிழ்நாட்டு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டு மக்களின் பெரும்பாலனவர்கள் இலங்கை அரசின் பேரினவாத வன்முறைக் கொடுமைகளுக்கு எதிரானவர்கள் எனினும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக இராணுவ பொருளாதர உதவிகளை வளங்குவது இங்கு குறிக்கத்தக்கது.

ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு எதிராகவும் பல தமிழகத் தலைவர்கள் போராட்டம் தொடங்கியக் காலங்களின் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். அன்மையில் இலங்கையின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தமிழ் இனவழிப்பு அதிகரித்த நிலையில் தமிழ்நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. தமிழீழத் தனியரசுக்கான ஆதரவு நிலையும் தோன்றியுள்ளது. வே. பிரபாகரனின் நிழல்படங்களையும் புலிக்கொடிகளையும் போராட்டங்களின் போது பயன்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

போராட்டங்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.