தமிழ் மறுமலர்ச்சிக் காலம்

வெளி ஆக்கிரமிப்புக்களாலும் காலனித்துவ ஆதிக்கத்தாலும் தமிழ் தேங்கி கிடந்த நிலையில் இருந்து மீண்டு தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்த தொடங்கிய காலப்பகுதி தமிழ் மறுமலர்ச்சி காலம் ஆகும். "கி.பி. 1887 முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் முதல் தமிழின் மறுமலர்ச்சி காலம் எனலாம். இவ்வாண்டில் இருந்துதான் கல்வெட்டுக்களின் அறிக்கைகள் வெளிவரத்தொடங்கின. தமிழின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. தமிழின் தொன்மை வெளியுலகத்துக்கு தெரிய ஆரம்பித்தது. பண்டைத் தமிழரின் நாகரிகத்தை உலகம் அறிய முற்பட்டது." [1]

இந்த மறுமலர்ச்சிக்கு மேலைநாடுகளில் இருந்து சமயம் பரப்ப வந்த மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளும் உதவியது. குறிப்பாக வீரமாமுனிவர் 1856-இல் எழுதிய 'திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்' (The Comparative Grammar of the Dravidian Languages) ஆய்வு தமிழின் தனித்துவ பண்பை நிறுவ உதவியது.

19 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழறிஞர்கள் சங்க ஏடுகளை தேடிப் பெற்று அச்சுப் பதிப்புச் செய்து பொது மக்களுக்கு எடுத்து செல்லும் பணியையும் செய்தனர். இந்த பணியை செய்தவர்களில் உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேற்கோள்கள்

  1. ஆ. மணிவழகன். (2005). பண்டைத் தமிழரின் தொலை நோக்கு பார்வை. சென்னை: காவ்வியா.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.