தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையாலும், சிங்கள அரசின் பொருளாதாரத் தடையாலும், சிதைந்த தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் திறமையயான திட்டமிடுதலின் அடிப்படையில் உரிய இயற்கை வளங்களைக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கவும்,வேளாண்மையும்,கைத்தொழிலுமே பொருண்மிய கட்டுமாணத்திற்கு அடித்தளமானது என்பதால் இவற்றை வளர்த்தெடுக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட கழகமாகும்.[1]

இவற்றையும் பார்க்கவும்

  • வைகாசி 6, 1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன், ‘தமிழீழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம்@ தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது. இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்று, விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்” என்றார்.

குறிப்புகள்

  1. தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .33
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.