தமிழர் பழக்கவழக்கங்கள்

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்களை பட்டியலிட்டு சிறு விளக்கங்களைத் தர இக்கட்டுரை முனையும்.

கை கூப்பி வணக்கம் செலுத்துதல்

இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.

பெரியோரைப் பெயரிட்டு அழைக்காமை

பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.

காலணிகளை வீட்டுக்கு வெளியில் அல்லது வாசலில் விடல்

வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் யப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

விருந்தோம்பல்

வீட்டுக்கு வந்தோருக்கு உண்ணவும் பருகவும் உணவும் நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.

உணர்ச்சி வெளிப்பாடு

மேற்கு நாட்டோருடன் ஒப்பிடும்பொழுது தமிழர்கள் பொதுவாக உணர்ச்சிவயப்பட்டவர்கள். செத்த வீட்டில் ஓவென நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு.

நேரம்

தமிழர்கள் நேரம் தொடர்பாக இறுகிய கட்டுப்பாட்டை அற்றவர்கள். அதாவது ஒரு நிகழ்ச்சி 6 மணிக்கு என்று அறிவித்தால் அது 6:45 ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது பொதுவாகத் தமிழர்களுக்கிடையே யான நிகழ்வுகளுக்கே.

உரையாடல்

தொடர்பாடல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.