தமிழர் நாட்டுப்புறவியல்

தமிழ் மக்களின் நாட்டுப் புற வாழ்வியல் கூறுகளை ஆயும் இயலே தமிழர் நாட்டுப்புறவியல் ஆகும். இலங்கையில் இத் துறை தமிழர் நாட்டாரியல் என்று பெரிதும் அறியப்படுகிறது. தமிழர் நாட்டுப்புற வழக்காற்றியல் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. தமிழரின் அன்றாட வாழ்வில் பெரும்பாலும் வாய்மொழியாக வழங்கி வந்த பாட்டுக்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள் ஆகியவையும், பார்த்துச் செய்தல் மூலம் பகிரப்பட்ட ஆடல்கள், கூத்து, இசை, விளையாட்டுக்கள், வழக்கங்கள், கைத்தொழில்கள், நுட்பங்கள் மற்றும் கலைகள் ஆகியவையும் தமிழர் நாட்டுப்புறவியலில் அடங்கும்.

குறிப்பாக பெரும் மரபுகள் அல்லது கதையாடல்களைத் தாண்டி வாழும் கிராமத்து மக்கள், தலித் மக்கள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை இத் துறை கவனமெடுத்து ஆய்கிறது. இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புறச் சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். பல சந்தர்ப்பங்களில் நாட்டுப்புறவியல் செவ்விலக்கியங்களோடும், பெரும் மரபுகளோடும் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டுவர்.

நூலக நூல்கள்

உசாத்துணைகள்

  • அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.