தமர்லா வெங்கடப்ப நாயக்கர்

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தர்மா என்றும் தர்மா வின் தந்தை தமர்லா அப்ப ராஜு குறிப்பிட்ட உள்ளார் . [1] விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [2][3] [4] [5] [6] இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். விஜயநகரப் பேரரசர் பேடா வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பேடா வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள்[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.