தன்நிறப்புரி
தன்நிறப்புரி அல்லது தன்னிறமூர்த்தம் (Autosome) எனப்படுவது பால்குறி நிறப்புரியிலிருந்து வேறுபட்ட நிறப்புரியாகும். மனிதரை எடுத்துக் கொண்டால், 22 சோடி தன்நிறப்புரிகளும், ஆண், பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்குறி நிறப்புரிகளும் காணப்படுகின்றன.
மனிதரில் உள்ள நிறப்புரிகள் | |
---|---|
பெண் | ஆண் |
![]() |
![]() |
ஆணிலும், பெண்ணிலும் ஒவ்வொரு தன்நிறப்புரியிலும் இரு பிரதிகள் இருக்கும். அவை 1-22 நிறப்புரிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 23 ஆவது நிறப்புரி பால்குறி நிறப்புரியாக இருப்பதுடன் ஆணிலும், பெண்ணிலும் வெவ்வேறாக இருக்கும். பெண்ணில் இரு பிரதிகளைக் கொண்ட X நிறப்புரியும், ஆணில் தனியான ஒரு X நிறப்புரியும், தனியான ஒரு Y நிறப்புரியும் காணப்படும். |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.