தனிமனிதத்துவம்
தனிமனிதரை, அவரின் சுதந்திரத்தை, உரிமைகளை, தற்சார்பை முன்னிறுத்தி அற, அரசியல், பொருளாதார, சமூக முறைமைகளை அணுகுவதைத் தனிமனிதத்துவம் குறிக்கின்றது. இது இயன்றவரை தனிமனிதனின் வாழ்வில் விருப்பின்றி அரசு, சமயம் போன்ற வெளிக் கூறுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இதனால் இது பொதுவுடமைத்துவம், மரபு, சமயம் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதில்லை.
சார்புக் கருத்துக்கள்
“ | மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? 'தான்' என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. | ” |
கவிஞர் தேவதேவன் [1]
விமர்சனக் கருத்துக்கள்
“ | உலக மாற்றத்தில் இதுவும் ஒன்று. என்னவென்றால் தனிமனிதத்துவம் முக்கியப்படுத்தப்பட்டு வரும் நிலைமையும் விழுமியங்கள் சரிந்து போகும் நிலைமையும் உலகத்தின் பொதுவான போக்காக இருக்கிறது. மேற்கத்தைய நாடுகளின் தனிமனிதன் முக்கியத்துவம் பெறும் தன்மை தனித்துவமாக வாழும் தன்மை. குடும்ப அமைப்புகளில் தங்கி இருக்காத தன்மை இவை சமூகத்தில் தங்கியிருக்காத தன்மை தான் முக்கியம் பெறுகின்றன. இது நமது நாட்டிலும் காணப்படுகிறது. ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலைமை, குழுவாக செயற்படும் நிலைமை, இன்னொருவருக்கு உதவி செய்வது விழுமியங்களில் நம்பிக்கை கொள்வது, அன்பு செய்வது இவையெல்லாம் முக்கியம் இல்லாமல் போய் பணம் உழைப்பதுதான் முக்கியமாகிவிட்டது. | ” |
கோகிலா மகேந்திரன்[2]
இவற்றையும் பாக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.