தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்

தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம் (International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) தடகள விளையாட்டுக்களை பன்னாட்டளவில் கட்டுப்படுத்தும் ஓர் விளையாட்டு கட்டுப்பாடு அமைப்பாகும். சூலை 17, 1912 அன்று இசுடாக்ஹோமில் 17 நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றுகூடிய முதல் மாநாட்டில் பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பாக இது உருவானது. அக்டோபர் 1993 முதல் இதன் தலைமை அலுவலகம் மொனாக்கோவிலிருந்து இயங்குகிறது.

தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம்
International Association of Athletics Federations
உருவாக்கம்17 சூலை 1912
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம் மொனாக்கோ
உறுப்பினர்கள்
212 உறுப்பினர் சங்கங்கள்
தலைவர்
இலாமைன் டியாக்
வலைத்தளம்www.IAAF.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.