தஞ்சைவாணன் கோவை

தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன்[1] என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. [2] தஞ்சைவாணன், பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.

நூலமைப்பு

கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது.[1] ‘ இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

தஞ்சைவாணன் கோவை நூலின் உள்ளடக்கம் வருமாறு

இயல்துறைபாடல்களின் எண்ணிக்கைகுறிப்பு
களவியல்01. கைக்கிளை00
களவியல்02. இயற்கைப் புணர்ச்சி00
களவியல்03. வன்புறை00
களவியல்04. தெளிவு00
களவியல்05. பிரிவுழி மகிழ்ச்சி00
களவியல்06. பிரிவுழிக் கலங்கல்00
களவியல்07. இடந்தலைப்பாடு00
களவியல்08. பாங்கற்கூட்டம்00
களவியல்09. பாங்கி மதியுடன்பாடு00
களவியல்10. பாங்கியிற் கூட்டம்00
களவியல்11. ஒருசார் பகற்குறி00
களவியல்12. பகற்குறி இடையீடு00
களவியல்13. இரவுக்குறி00
களவியல்14. இரவுக்குறி இடையீடு00
களவியல்15. வரைதல் வேட்கை00
களவியல்16. வரைவு கடாதல்00
களவியல்17. ஒருவழித் தணத்தல்00
களவியல்18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்00
வரைவியல்19. வரைவு மலிவு00
வரைவியல்20. அறத்தொடு நிற்றல்00
வரைவியல்21. உடன்போக்கு00
வரைவியல்22. கற்பொடு புணர்ந்த கவ்வை00
வரைவியல்23. மீட்சி00
வரைவியல்24. தன்மனை வரைதல்00
வரைவியல்25. உடன்போக்கு இடையீடு00
வரைவியல்26. வரைதல்00
கற்பியல்27. இல்வாழ்க்கை00
கற்பியல்28. பரத்தையிற் பிரிவு00
கற்பியல்29. ஓதற் பிரிவு00
கற்பியல்30. காவற் பிரிவு00
கற்பியல்31. தூதிற் பிரிவு00
கற்பியல்32. துணைவயிற் பிரிவு00
கற்பியல்33. பொருள்வயிற் பிரிவு00

உரை

இந்நூலிற்கு சொக்கப்ப நாவலர் என்பவர் உரை எழுதி இருக்கிறார். [3]

சான்றடைவு

  1. தி.தெ.சை.நூ.கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையின் முன்னுரை
  2. சாமிநாதையர் உ.வே, என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
  3. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்கு சொக்கப்ப நாவலர் வரைந்த உரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.