தகவல் சுதந்திரம்
தகவல் சுதந்திரம் அல்லது தகவலுக்கான உரிமை என்பது கருத்துவெளிப்பாடுச் சுதந்திரத்தின் நீட்சியாக அடிப்படை மனித உரிமையாக அனைத்துலக சட்டங்களால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அரசுகளிடம் இருக்கும் தகவல்களைப் பெறுதல், தனிநபர் அந்தரங்கம், இணையம் ஊடாகக் தகவல் பகிர்வு ஆகியவை தொடர்பான உரையாடல்களிலும் சட்டங்களிலும் தகவல் சுதந்திரம் அல்லது உரிமை முக்கியம் பெறுகிறது.
தகவல் உரிமைச் சட்டங்கள்
அரசுகளிடம் இருக்கும் தகவல்களை மக்கள் பெறுவதற்கு தகவல் சுதந்திரமே சட்ட அடிப்படையாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல நாடுகள் தகவல் உரிமைச் சட்டங்களை நிறைவேற்றி உள்ளன.
அந்தரங்கம் தொடர்பான உரிமைகளை உறுதி செய்யவும் தகவல் சுதந்திரம் பயன்படுகிறது. அதாவது அரசுகள் தமது தரவுத்தளங்களில் நபர்கள் பற்றி வைத்திருக்கக் கூடியத் தகவல்களைப் பெறுவதற்கும், அரசுகள் எவ்வாறான தனிநபர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும் வெளிப்படுத்தவும் தகவல் சுதந்திரம் உதவுகிறது.[1] எ.கா யார் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் போன்ற தகவல்களைப் பெறுவதற்கு, இணையப் பயன்பாடு தொடர்பான அரசுகள் என்ன தரவுகளைத் திரட்டுகின்றன என்பதை அறிவதற்குத் தகவல் சுதந்திரம் உதவுகிறது.
இணையம், தகவல் தொழில்நுட்பம்
இணையம் ஊடாகக் தடையின்றி தகவல்களைப் பகிர்வதற்கு அடிப்படையாக தகவல் சுதந்திரம் பார்க்கப்படுகிறது.