டைன் ஆறு

டைன் ஆறு (River Tyne,/ˈtn/ (listen)) இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஓர் ஆறாகும். வடக்கு டைன், தெற்கு டைன் என்ற இரு துணையாறுகள் ஒன்றிணைந்து டைன் ஆறு உருவாகிறது. நார்தம்பர்லாந்து மலைகளில் எக்சுஹாம் பகுதியில் ஆறுகளின் சங்கமம் எனப்படும் இடத்தில் இவ்விரு துணையாறுகளும் கலக்கின்றன. தொடர்ந்து 48 கி.மீ மேற்கு திக்கில் ஓடுகின்ற டைன் ஆறு டைன் கழிமுகம் என்னுமிடத்தில் வடகடலில் கலக்கிறது. டைன் ஆற்றின் மொத்த நீளம் 128 கி.மீ. ஆகும். டைன் ஆற்றங்கரையில் உள்ள முதன்மை நகரங்கள் நியூகாசில், தெற்கு சீல்ட்சு என்பவையாம். நியூகாசில் மற்றும் கேட்சுஹெட் பரோவை இவ்வாறு 13 மைல் தொலைவிற்கு பிரித்தவாறு ஓடுகிறது. இவ்விரு நகர்ப்பகுதிகளுக்கும் இடையே மட்டும் 10 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கிழக்காக ஓடும்போது இதேபோல ஹெப்பர்ன் மற்றும் ஜார்ரோ ஆற்றின் தென்புறத்திலும் நியூகாசிலின் வாக்கர் மற்றும் வால்சென்டு வடபுறத்திலுமாக பிரிக்கிறது. இவ்விடத்தில் டைன் சுரங்கம் எனப்படும் ஆற்றினடி சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது. இது டர்ஹாம் கௌன்டிக்கும் நார்த்தம்பர்லாந்து கௌன்டிக்குமான எல்லையாக விளங்குகிறது.

சௌத் சீல்டுசு துறைமுகத்தில் கைவிடப்பட்ட துறைகள்
டைன் ஆறு
ஆறு
நாடு  ஐக்கிய இராச்சியம்
Part  இங்கிலாந்து
Primary source தெற்கு டைன்
 - அமைவிடம் அல்ஸ்டன் மூர்
Secondary source வடக்கு டைன்
 - location டெட்வாட்டர் ஃபெல், கீல்டர், நார்தம்பர்லாந்து
கழிமுகம் டைன் கழிமுகம்
 - அமைவிடம் தெற்கு சீல்ட்சு
நீளம் 100 கிமீ (62 மைல்)
வடிநிலம் 2,145 கிமீ² (828 ச.மைல்)

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.