டேஜியோன்

டேஜியோன் (Daejeon) தென் கொரியாவின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகரமாகும். இங்கு 150000 மக்கள் வசித்து வருகின்றனர். இது தென்கொரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. போக்குவரத்து மையமாக உள்ளது. தென்கொரியாவின் தலைநகரான சியோலுக்கு மிக அருகில் உள்ள நகரமாகும்.

டேஜியோன்
டேஜியோன்
பரப்பளவு
  மொத்தம்539.85
ஏற்றம்216
மக்கள்தொகை
  மொத்தம்15,12,189

புவியியல் அமைப்பு

டேஜியோன் நிலப்பரப்பு அகலத்தில் N36 ° 10'50 "மற்றும் N36 ° 29'47" மற்றும் நீளத்தில் E127 ° 14'54 "மற்றும் E127 ° 33'21" இடையே தென் கொரியாவில் உள்ளது.

விளையாட்டு

2002 தென் கொரியாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் டேஜியோனில் உலகக் கோப்பை கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. இங்கு நடந்த இரண்டாவது சுற்றில் தென் கொரிய காற்பந்து அணி இத்தாலியைச் சந்தித்தது. மேலும் டேஜியோன் நகரை மையமாகக் கொண்டு K லீக் சவால் கால்பந்து கிளப் அணியான டேஜியோன் சிட்டிசன், தேசிய லீக் டேஜியோன் அணிகள் உள்ளன.

வளர்ச்சி

மே 16, 2013 இல், டேஜியோன் நகரம் சர்வதேச அறிவியல் வியாபார பட்டை என தேர்ந்தெடுக்கப்பட்டது

போக்குவரத்து

தென் கொரியாவில் டேஜியோன் போக்குவரத்து மையமாக உள்ளது. சியோங்குபுபு விரைவுச்சாலை மற்றும் ஒனாம் விரைவுச்சாலைகள் ஆகிய இரண்டு முக்கிய சாலைவசதிகளை பெற்றுள்ளது. மேலும் முக்கிய ரயில் பாதைகளான சியோங்குபுபு மற்றும் ஒனாம் இரயில்வே இரண்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. KTX என்ற மிகுவிரைவு இரயில் டேஜியோன் மற்றும் சியோலுக்கு இடையே ஓடுகிறது. இதன் பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் ஆகும்.

டேஜியோனுக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் சேங்குச்சூ வானூர்தி நிலையம் ஆகும், இது டேஜியோனிலிருந்து முப்பது நிமிட பயணமாகும். டேஜியோனிலிருந்து, இன்சோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் நேரடிப் பேருந்து இணைப்புகளும் உள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.