டெக்டோனிக் பலகைகளின் நகர்தல்

டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல் (Shifting of Techtonic Plates) என்பது பூமியின் உள்ள பாறைமண்டலத்தின் பேரளவு அசைவை கூறும் அறிவியல் கோட்பாடு. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் உருவான அண்டங்கள் நகர்தல் எனும் கருத்தாக்கத்தின் மேலே இக்கோட்பாடு வளர்ந்தது. பாறைமண்டலமே டெக்டோனிக் தட்டுகளாக உடைக்கபட்டிருகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் டெக்டோனிக் தட்டுகள் வரையப்பட்டன.

பூமியை பொறுத்தவரை தற்பொழுது எட்டு பெரிய பலகைகள் மற்றும் பலசிரிய டெக்டோனிக் தட்டுகள் உள்ளன. மென்பாறைகொலத்தின் மீதே இந்த பாறைமண்டலம் அமைந்துள்ளது. இந்த டெக்டோனிக் பலகைகள் ஒன்றுடன் ஒன்று சேர்த்தல் அல்லது பிரிதல் அல்லது உரசி கொள்கின்றன. இந்த செயல்களால் பலகைகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடல் பள்ளத்தாக்குகள் உருவாகுகின்றன.

முக்கிய பலகைகள்

இதன் முக்கிய எட்டு பலகைகள் :

  • ஆப்பிரிக்கன் பலகை
  • அண்டார்டிக் பலகை
  • இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள இந்திய-ஆஸ்திரேலிய தகடு:

o இந்திய பலகை o ஆஸ்திரேலியன் பலகை

  • யுரேசியன் பலகை
  • வட அமெரிக்க பலகை
  • தென் அமெரிக்க பலகை
  • பசிபிக் பலகை

சிறிய பலகைகள்

ஏழு முக்கிய சிறிய தகடுகள் பின்வருமாறு :

  • அரேபிய பலகை
  • கரீபியன் பலகை
  • ஜோன் டி பூகா பலகை
  • கோகோஸ் பலகை
  • நாஸ்கா பலகை
  • பிலிப்பைன் கடல் பலகை
  • ஸ்கோஷியா பலகை

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.