டுரூபல் மக்கள்
டுரூபல் (Turrubal) எனப்படுவோர் ஓர் ஆத்திரேலியப் பழங்குடி இனத்தவர். ஐரோப்பியர் ஆத்திரேலியாவிற்கு வருவதற்கு முன் பிரிஸ்பேன் நகரம் தற்போது இருக்கும் பகுதிகளில் வசித்து வந்தனர்.[1] பிரிஸ்பேன் நகரத்தில் ஆரம்ப காலங்களிலிருந்த டாம் பெட்ரி என்பவரின் குறிப்புப்படி டுரூபல் மக்கள் கனிவான குணமும், நம்பகத்தன்மையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இந்த மக்கள் மற்றவர்களிடமிருந்து பலவிதத்திலும் கொடுமைகளை சந்தித்தபோதும், மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக டாம் பெட்ரியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.[2] இவர்கள் டுருபல் மொழியைப் பேசினர்.[2] தற்போது இம்மொழி அழிந்துவிட்ட மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சான்றுகள்
- "Turrubal history" (Website). dakibudcha.com. பார்த்த நாள் 2008-02-13.
- "Tom Petrie Remeniscence of Early Queensland" (Website). பார்த்த நாள் 2009-11-06.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.