டிரிபிள் எச் (மற்போர் வீரர்)

பால் மைக்கேல் லிவஸ்க் (Paul Michael Levesque (பிறப்பு:சூலை, 27, 1969) பரவலாக டிரிபிள் எச் என மேடைப் பெயரால் அறியப்படும் இவர் ஓர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் பகுதிநேர நடிகர். இவர் 2013 ஆம் ஆண்டிலிருந்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரகச் செயல்பட்டு வருகிறார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார்.[1][2]

டிரிபிள் எச் நியூ ஆம்சயரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டில் இருந்து தனது தொழில்முறை மற்போரில் கந்து கொண்டுள்ளார். முதன்முதலாக சர்வதேச மற்போர் கூட்டமைப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் டெரா ரைசிங் எனும் பெயரில் கலந்துகொண்டார். பின் 1995 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமானர். முதலில் ஹண்டர் ஹியர்ஸ்ட் ஹெல்ம்ஸ்லீ எனும் பெயரில் அறிமுகமாகி பின் டிரிபிள் எச் என  மாற்றிக்கொண்டார்.  [3]

ஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார்.[4] பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[5]

டிரிபிள் எச் பல வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். குறிப்பாக ஐது முறை கண்டங்களுக்கு இடையேயான வாகையாளர் பட்டத்தினையும் (இண்டர் காண்டினண்டல் ) இருமுறை இணையாளர் வாகையாளர் பட்டம் (டேக் டீம்) பதினான்கு முறை உலக மற்போர் வாகையாளர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இரு முறை ராயல் ரம்பிள் மற்றும் கிங் ஆஃப் தெ ரிங் போட்யில் வென்றுள்ளார்.[6][7] மேலும் மற்போர் நிகழ்வுகளுக்கு அப்பாலும் இவரின் செயல்களால் அறியப்பட்டார். மேலும் என் எக்ஸ் டி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மூத்த தயாரிப்பளராகவும் இருந்து வருகிறார். .[8]

உலக மற்போர் நிறுவனத்தின் பெரும்பகுதி பங்குதாரரான வின்ஸ் மெக்மகனின் மகளான ஸ்டெஃப்னி மெக்மனை திருமணம் செய்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் டி ஜெனேரசன் எக்ஸ் சில் இருந்த குழு உறுப்பினர்களான இவருக்கும் , சான் மைக்கேலுக்கும் ஹால் ஆஃப் ஃபேம் வழங்கப்பட்டது.

ஷான் மைக்கேலுடன் இணைந்து டி-கெனெரேசன் எக்ஸ் எனும் குழுவில் இணைந்த பிறகு இவர் பரவலாக அறியப்பட்டார். 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்த குழு உலக மற்போர் மகிழ்கலை நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக இந்த குழுவின் செயல்பாடுகள் அறியப்பட்டன. 1999 ஆம் ஆண்டில் தனது முதல் உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்ற பிறகு பல முக்கியமான போட்டிகளில் விளையாடினார்.  பல மற்போர் விமர்சகர்களால் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

பால் மைக்கேல் லிவஸ்க் [9] சூலை, 27, 1969 [10] இல் நியூஹம்சயர், நசுவாவில் [11] பிறந்தார். இவருக்கு லின் எனும் இளைய சகோதரி உள்ளார். தனது ஐந்தாம் வயதில் சீஃப் ஜே ஸ்டராங்பவ்  விளையாடிய முதல் போட்டியினை பார்த்துள்ளார்.[12] இவர் நாசுவா தெற்கு உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற காலகட்டத்தில் அடிப்பந்தாட்டம், கூடைப்பந்து போன்ற விளையாடுக்களில் ஈடுபட்டு வந்தார்.  

1987 ஆம் ஆண்டில் பட்டப் படிப்பு பயின்றபோது உடற் கட்டமைப்பு போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். தனது பதினான்காம் வயது முதல் இவர் உடலை சீரமைப்பதில் ஆர்வம் காட்டினார். தான் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் போது தொழில்முறை மற்போர் வீரனாக காட்சி அளிக்க வேண்டும் என இவர் நினைத்தார். 1988 ஆம் ஆண்டில் மிஸ்டர் நியூ ஹாம்சயர் பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு வயது 19 ஆகும்.[13][14]

சான்றுகள்

  1. Oster, Aaron (February 26, 2015). "NXT, Where the Women Work". Rolling Stone. https://www.rollingstone.com/culture/news/nxt-where-the-women-work-20150226. பார்த்த நாள்: February 26, 2015.
  2. "The Magnificent Seven: The Top 7 WWE Moments of 2015 - 411MANIA".
  3. "Wrestler snapshot: Triple H". Wrestling Digest. August 2002. Archived from the original on November 21, 2007. https://archive.is/20071121150725/http://findarticles.com/p/articles/mi_m0FCO/is_2_4/ai_88761521. பார்த்த நாள்: September 20, 2007.
  4. "Triple H Bio". World Wrestling Entertainment. மூல முகவரியிலிருந்து November 24, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 14, 2009.
  5. Moore, Michael (March 31, 2011). "A guide to collecting WrestleMania's biggest stars from WrestleMania 1 to 27".
  6. "W.W.W.F./W.W.F./W.W.E. World Heavyweight Title". Wrestling-Titles.com. பார்த்த நாள் October 8, 2007.
  7. "World Heavyweight Title (W.W.E. Smackdown!)". Wrestling-Titles.com. பார்த்த நாள் October 8, 2007.
  8. "HHH salary and job title". 411 Mania. பார்த்த நாள் March 23, 2014.
  9. "Triple H Bio". Online World of Wrestling. பார்த்த நாள் August 30, 2011.
  10. Milner, John; Clevett, Jason; Kamchen, Richard (December 5, 2004). "Hunter Hearst Helmsley". Canoe.ca (Canadian Online Explorer). http://slam.canoe.com/Slam/Wrestling/Bios/helmsley.html. பார்த்த நாள்: July 11, 2007.
  11. "Famous People From New Hampshire". NH Tour Guide. பார்த்த நாள் October 3, 2011.
  12. "An Interview With WWE Star Triple H Paul Levesque".
  13. Triple H and Chyna.It's Our Time[VHS].World Wrestling Federation.
  14. Peter McGough (July 2002). "Coming to grips with Triple H". Flex. Archived from the original on October 14, 2007. https://web.archive.org/web/20071014024057/http://findarticles.com/p/articles/mi_m0KFY/is_5_20/ai_98539200. பார்த்த நாள்: September 20, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.