டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222 (TransAsia Airways Flight 222 GE222)[2] என்பது கவோஷியோங் இருந்து பெங்கு தீவில் இருக்கும் மகோங் வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் நெருக்கடியான சூழலில் தரையிறங்க முயன்றபோது வீழ்ந்து நொறுங்கிய டிரான்சுஆசியா ஏர்வேசு நிறுவன வானூர்தி ஆகும்.ஏடிஆர் 72-500 ரக விமானம் பெங்கு தீவின் ஜிஜி கிராமத்தில் தீப்பிடித்து வீழ்ந்தது.விமானத்தில் பயணம் செய்த 48 பேர் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.[3][4][5]

டிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222
விபத்தில் சிக்கிய B-22810 வானூர்தி (2012இல் எடுத்த ஒளிப்படம்)
விபத்து சுருக்கம்
நாள்23 ஜூலை 2014
இடம்உசி ,பெங்கு, தாய்வான்
பயணிகள்54[1]
ஊழியர்4
உயிரிழப்புகள்48
தப்பியவர்கள்10
வானூர்தி வகைஏடிஆர் 72-500
இயக்கம்டிரான்சுஆசியா ஏர்வேசு
வானூர்தி பதிவுB-22810
பறப்பு புறப்பாடுகவோஷியோங் சர்வதேச விமான நிலையம்
சேருமிடம்மகோங் விமான நிலையம்

விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்

தைவானில் மாட்மோ சூறாவளியின் காரணமாக வானிலை சரியில்லாத காரணத்தால் ஏடிஆர் 72-500 விமானம் சென்றடைய வேண்டிய மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை எனவே விமான கட்டுப்பட்டு அதிகாரிகள் காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.பின்னர் 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.[4][6]

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

நாடுபயணிகள்ஊழியர்மொத்தம்
 பிரான்சு2[7]02
 சீனக் குடியரசு52456
மொத்தம்54458

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.