டின்டால் விளைவு

டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும்.

தூசு மற்றும் பனித்துகள்கள் நிறைந்த பகுதியில் சூரிய ஒளி சிதறுதல்
நீரில் உள்ள மாவுப்பொருள் ஒரு கூழ்மமாக உள்ளது. நுண்துகள்களாக உள்ள மாவுப்பொருள் அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியைக் காட்டிலும் குறுகிய அலைநீளம் கொண்ட நீல நிற ஒளியை அதிகமாக சிதறச்செய்வதால், மெல்லிய நீல நிறம் காணப்படுகின்றது

புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.