டி. வி. சாம்பசிவம் பிள்ளை

டி. வி. சாம்பசிவம் பிள்ளை தமிழின் முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.[1] டி. வி. என்ற ஆங்கில முதலெழுத்துக்கள் தஞ்சாவூர் வில்வையா மன்னையார் என்ற அவரது தந்தை பெயரைக் குறிக்கின்றன. பெங்களூரில் 1880-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார்.[2] சாம்பசிவத்தின் மருத்துவப் பின்னணி குறித்து முழுதும் தெரிந்திலது. இவர் காவல்துறையில் எழுத்தராய்ப் பணி தொடங்கி காவல்துறை ஓய்வாளராய்ப் பணி ஓய்வு பெற்றவர். இவர் எழுதிய Tamil English Dictionary of Medicine, Chemistry and Allied Sciences Based on Indian Medical Science என்ற அகராதி இவர் இறப்புக்குப் பின்னர் 4000 பக்கங்கள் உடைய தொகுதியாய் வெளியானது. இதில் 80,000 சொற்கள் இடம்பெற்றுள்ளன.[3] 1953-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி தனது 73-வது வயதில் சாம்பசிவம் பிள்ளை மறைந்தார்.[2]

டி. வி. சாம்பசிவம் பிள்ளை
பிறப்பு19 செப்டம்பர் 1880
பெங்களூர்
இறப்பு12 நவம்பர் 1953

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.