டி. ஜெ. அம்பலவாணர்

அதி வணக்கத்துக்குரிய தாவீது செயரத்தினம் அம்பலவாணர் (David Jeyaratnam Ambalavanar, பெப்ரவரி 28, 1928 - அக்டோபர் 10, 1997) இலங்கைத் தமிழ் போதகர் ஆவார். இவர் 1971 முதல் 1993 வரை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயராகப் பணியாற்றினார்.

அதி வணக்கத்துக்குரிய
டி. ஜே. அம்பலவாணர்
யாழ் ஆயர்
சபைதென்னிந்தியத் திருச்சபை
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்30 சூன் 1971
ஆட்சி முடிவு28 பெப்ரவரி 1993
முன்னிருந்தவர்எஸ். குலேந்திரன்
பின்வந்தவர்எஸ். ஜெபநேசன்
பிற தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 28, 1928(1928-02-28)
இறப்பு10 அக்டோபர் 1997(1997-10-10) (அகவை 69)
படித்த இடம்பரி. யோவான் கல்லூரி
யாழ்ப்பாணக் கல்லூரி
செரம்பூர் கல்லூரி]]

ஆரம்ப வாழ்க்கை

அம்பலவாணர் 2928 பெப்ரவரி 28 இல்[1][2] வண. யோசப் பொன்னம்பலம் அம்பலவாணர், அன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி (1932–42), யாழ்ப்பாணக் கல்லூரி (1942-50). ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பின்னர் இவர் இந்தியா சென்று மேற்கு வங்கம் செரம்பூர் கல்லூரியில் 1955 இல் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1959 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] 1968 இல் இலண்டன் கிங்சு கல்லூரியில் இறையியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அம்பலவாணர் சந்திரராணி கணபதிப்பிள்ளை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு தேவதர்சன், தேவதயாளன் என இரு மகன்கள் உள்ளனர்.[1]

பணி

1955 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் அம்பலவாணர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் மறைமாவட்ட மறைப்பரப்புனராக பணியில் சேர்ந்தார்.[1] 1971 சூன் 30 இல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்மறைமாவட்டத்துக்கான 2வது ஆயராக நியமிக்கப்பட்டார்.[1][2] 1993 பெப்ரவரி 28 இல் இளைப்பாறினார்.[1][2]

அம்பலவாணர் யாழ்ப்பாணக் கல்லூரியின் பணிப்பாளர் சபையின் தலைவராகப் பணியாற்றினார்.[2] ஈழப்போரின் போது பொதுமக்களின் இழப்புகளுக்காக அம்பலவாணர் குரல் கொடுத்தார்.[1]

மறைவு

அம்பலவாணர் சிறிது காலம் சுகவீனமுற்ற நிலையில் 1997 அக்டோபர் 10 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் தனது 69ஆவது அகவையில் காலமானார்.[2][3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.