டி. என். ஏ பாலிமரேசு

டி.என்.ஏ பாலிமரேசு (DNA polymerase) என்னும் நொதியால் (enzyme) மரபுநூலிழை (DNA) பிரதியெடுக்கப்படுகிறது (Replication). பாலிமரேசு தொடர் வினை நுட்பத்தில் பயன்படும் டி.என்.எ பாலிமரேஸ் மிக வெப்பநிலையில் (எரிமலையில்) வாழும் பக்டீரியாவில் பிரித்தெடுக்கப்படுகிறது. கொதிநிலையில் வாழும் பக்டீரியா தெர்மசு அக்குவாட்டிக்கசில் (Thermus aquaticus) இருந்து பெறப்படும் நொதிக்கு மக்னீசியம் குளோரைடு (MgCl2) மற்றும் குறைந்த அளவிலான ஆக்கமும் (Processvity), அதனால் பிரதிஎடுத்தலின் போது தவறுகள் (mutation) மிகையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வினை முடிவின் பொழுது, அடினைன் (adenine) ஆல் ஏற்படுவதால் (A-tail end), தயமின்-வால் வேக்டோரில் (T-tail vector) மிக எளிதாக வடிவாக்கம் (Cloning) செய்யலாம்.

பைரோக்காக்கஸ் பூரியோசசு (Pyrococcus furiosus) இருந்து பெறப்படும் நொதிக்கு மக்னீசியம் சல்பேட் (MgSo4)- துணைபொருளாகப் (co-substrate) பயன்படுத்தபடும். இந்நொதியின் செயலின் ஆக்கம் மிக வீரியமாக இருப்பதால் மிகையாக பாலிமரேசு தொடர் வினை நுட்பத்தில் பயன்படுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.