டான் செடில்

டான் செடில் (Don Cheadle, பிறப்பு: நவம்பர் 29, 1964) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் 1982ஆம் ஆண்டு முதல் ஹாம்பர்கர் ஹில் (1987), கலர்ஸ் (1988), ரோஸ்வுட் (1997), பூகி நைட்ஸ் (1997), டிராபிக் (2000) போன்ற பாடங்களில் நடித்துள்ளார். இவர் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படத்தில் ருவாண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

டான் செடில்
டான் செடில் 2011
பிறப்புநவம்பர் 29, 1964 (1964-11-29)
கேன்சஸ் நகரம் (மிசூரி)
அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், ஆசிரியர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1984–அறிமுகம்
துணைவர்பிரிட்கிட் கொல்டெர் (1992–அறிமுகம்)
பிள்ளைகள்2

2012 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஹவுஸ் லைஸ் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக 2013ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மார்வெல் வரைக்கதை கதாபாத்திரமான போர் இயந்திரம் என்ற கதாபாத்திரத்தில் அயன் மேன் 2 (2010), அயன் மேன் 3 (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பரவலாக அறியப்படும் நடிகர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. Thompson, Arienne (December 12, 2013). "Don Cheadle mellow, 'barely awake' after Globes news". USA Today. மூல முகவரியிலிருந்து December 12, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 12, 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.