டக்ளஸ் டிசி-8

டக்ளஸ் டிசி-8 (Douglas DC-8) அல்லது மக்டொனால்டு டக்ளஸ் டிசி-8 டக்ளஸ் வானூர்தி நிறுவனத்தால் 1958 முதல் 1972 வரை தயாரிக்கப்பட்ட நான்கு-பொறி, நீள்தொலைவு, குறுகிய உடற்பாக, பயணியர் போக்குவரத்திற்கான வணிகமுறை தாரைப்பொறி வானூர்தி ஆகும். போட்டி வானூர்தியான போயிங் 707க்கு எதிராக தயாரிக்கப்பட்ட டிசி-8, வானூர்திகள் சந்தையில் டக்ளஸ் நிறுவனத்திற்கு வலிய இடத்தை பெற்றுத் தந்தது. 1972இல் மற்ற பரந்த உடற்பாக வானூர்திகள் வடிவமைக்கப்படும் வரை இவை தயாரிக்கப்பட்டு வந்தன. டிசி-8இன் வடிவமைப்பினால் 707ஐ விட கூடுதலான சரக்குகளை எடுத்துச் செல்ல முடிந்தது. பொறிகள் மீளமைக்கப்பட்ட டிசி-8 வானூர்திகள் இன்றளவிலும் சரக்கு வானூர்திகளாக சேவை புரிகின்றன.

டிசி-8
ஏர் ஜெமைக்காவின் டிசி-8-62எச் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை நெருங்குதல் (1978)
வகை குறுகிய உடற்பாக தாரைப்பொறி வானூர்தி
National origin ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் டக்ளஸ் வானூர்தி
மக்டொனால்டு டக்ளஸ்
முதல் பயணம் மே 30, 1958
அறிமுகம் செப்டம்பர் 18, 1959 யுனைட்டெட் ஏர்லைன்சுடனும் டெல்டா ஏர்லைன்சுடனும்
தற்போதைய நிலை மட்டுப்பட்ட சரக்கு, பயணியர் போக்குவரத்தில்
பயன்பாட்டாளர்கள் ஏர் டிரான்ஸ்போர்ட் இன்டர்நேசனல்
ஏ இசுடார் ஏர் கார்கோ
ஜான்சன்சு ஏர்
உற்பத்தி 1958–1972
தயாரிப்பு எண்ணிக்கை 556
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.