டகோமா குறும்பாலம் (1940)
டகோமா குறும்பாலம் (Tacoma Narrows Bridge) என்பது முதன் முதலாக அமைக்கப்பட்ட டகோமா குறும்பாலங்களில் ஒன்று. இது 1940, சூலை 7 ஆம் தேதி, பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இது ஒரு தொங்கு பாலமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின், வாசிங்டன் மாநிலத்தில் அமைந்திருந்தது. திறக்கப்பட்ட அதே ஆண்டில் நவம்பர் 7 ஆம் திகதி, இப்பாலம் இடிந்து விழுந்தது.
டகோமா குறும்பாலம் | |
---|---|
![]() | |
பிற பெயர்கள் | Galloping Gertie |
வடிவமைப்பு | தொங்கு பாலம் |
மொத்த நீளம் | 5,939 அடிகள் (1,810.2 m) |
அதிகூடிய அகல்வு | 2,800 அடிகள் (853.4 m) |
Clearance below | 195 அடிகள் (59.4 m) |
திறப்பு நாள் | சூலை 1, 1940 |
நொறுங்கியது | நவம்பர் 7, 1940 |
அமைவு | 47°16′00″N 122°33′00″W |
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/USA Washington" does not exist. |
கட்டப்பட்ட காலத்தில் இதுவே உலகின் மூன்றாவது நீளமான தொங்கு பாலமாகும். குறும்பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று கால்களையுடைய நாய் மட்டுமே இறந்தது. செய்தியாளர் லியனார்டோ கோல்ட்சுவோர்த்து என்பவர் நாயுடன் தன் மகிழுந்தில் (கார்) வந்த போது சுங்கச்சாவடியிலிருந்து 1,895 அடி தொலைவிலேயே காற்றின் காரணமாக பாலம் பலமாக ஊசலாடியதால் நாயுடன் மகிழுந்தை நிறுத்தி விட்டு வந்தார்.[1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.