ஜோன் மெக்கார்த்தி
ஜோன் மெக்கார்த்தி (John McCarthy, செப்டம்பர் 4, 1927 - அக்டோபர் 24, 2011[1][2][3]) அமெரிக்க கணினி விஞ்ஞானியும் உணரறிவியல் அறிஞரும் ஆவார். செயற்கை நுண்ணறிவிற்காக தாம் ஆற்றிய பங்களிப்பிற்காக 1971 ஆம் ஆண்டு, டியூரிங் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற டார்த்மோத் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தனது ஆய்வறிக்கையில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவிற்கு பொருத்தமான ஆங்கிலப்பதமான Artificial Intelligence என்ற பதத்தை பயன்படுத்தி அறிமுகப்படுத்தினார். இவரே, லிஸ்ப் (Lisp) என்ற கணினி மொழியைக் கண்டுபிடித்தவராவார்.
ஜோன் மெக்கார்த்தி | |
---|---|
![]() 2006 இல் இடம்பெற்ற மாநாட்டின் போது, ஜோன் மெக்கார்த்தி. | |
பிறப்பு | செப்டம்பர் 4, 1927 பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐஅ |
இறப்பு | அக்டோபர் 24, 2011 84) பாஸ்டன் | (அகவை
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கணினித் தொழில்நுட்பம் |
பணியிடங்கள் | ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகம்; மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்; டார்ட்மூத் கல்லூரி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்; கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
ஆய்வு நெறியாளர் | சொலமன் லெஃப்செட்ஸ் |
அறியப்படுவது | செயற்கை நுண்ணறிவு; லிஸ்ப்; Circumscription; Situation calculus |
விருதுகள் | டூரிங் விருது (1971) அறிவியலுக்கான தேசிய விருது (1991) பெஞ்சமின் பிராங்கிளின் விருது (2003) |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.