ஜோ சல்டனா

ஜோ சல்டனா (சூன் 19, 1978) என்பவர் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகை ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு ஒளிபரப்பான லா & ஆர்டர் என்ற தொடரில் மூலம் அறிமுகமானார். ஒரு ஆண்டு கழித்து 2000ஆம் ஆண்டு பாலே நடனக் கலைஞராக சென்டர் ஸ்டேஜ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஜோ சல்டனா
பிறப்புசூன் 19, 1978 (1978-06-19)
பசைக், நியூ செர்சி
அமெரிக்கா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
மார்கோ பெரெகோ (தி. 2013தற்காலம்) «start: (2013)»"Marriage: மார்கோ பெரெகோ to ஜோ சல்டனா" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE)
பிள்ளைகள்3

இவர் 2009ஆம் ஆண்டு அறிவியல் புனைகதை திரைப்படமான ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நியோட்டா உஹுரா என்ற கதாபாத்திரத்திலும் அதே ஆண்டு வெளியான அவதார் என்ற திரைப்படத்தில் னேதிரி என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு திறன் பலரால் அறியப்பட்டது.

2014ஆம் ஆண்டு முதல் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான கமோரா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திர மூலம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[1] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளார் மற்றும் இவரது திரைப்படங்கள் உலகளவ ரீதியில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[2]

மேற்கோள்கள்

  1. Shattuck, Kathryn (May 4, 2017). "Zoe Saldana, Sci-fi Queen, on the ‘Guardians’ Sequel". The New York Times. https://www.nytimes.com/2017/05/04/movies/zoe-saldana-guardians-of-the-galaxy-vol-2.html. பார்த்த நாள்: June 25, 2019.
  2. "Zoe Saldana Movie Box Office Results". பார்த்த நாள் 3 July 2019.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.