ஜாமா பள்ளி, தில்லி
மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.
ஜாமா மஸ்ஜித் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′3″N 77°13′59″E |
சமயம் | இஸ்லாம் |
ஆட்சிப்பகுதி | தில்லி |
மாவட்டம் | மத்திய தில்லி |
நிலை | பள்ளிவாசல் |
கட்டிடக்கலை தகவல்கள் | |
கட்டிடக்கலை வகை | பள்ளிவாசல் |
கட்டிடக்கலைப் பாணி | இஸ்லாமியம், |
நிறைவுற்ற ஆண்டு | 1656 |
அளவுகள் | |
கொள்ளளவு | 85,000 |
நீளம் | 80 m |
அகலம் | 27 m |
குவிமாடம்(கள்) | 3 |
மினார்(கள்) | 2 |
மினாரின் உயரம் | 41 m |
கோபுர உயரம் | 40000 m |
தில்லி ஜாமா பள்ளிவாசல்
இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜாமா பள்ளி இமாம்கள்
- சையத் அப்துல் கபூர் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் அப்துல் சக்கூர் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் அப்துல் ரஹீம் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் அப்துல் கபூர் ஷா புஹாரி தானி சாஹி இமாம்
- சையத் அப்துல் ரஹ்மான் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் அப்துல் கரீம் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் மிர் ஜீவன் ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் மிர் அஹ்மது அலி ஷா புஹாரி சாஹி இமாம்
- சையத் முகம்மது ஷா புஹாரி சாஹி இமாம்
- மெளலானா சையத் அஹமது புஹாரி சாஹி இமாம்
- மெளலானா சையத் ஹமீது புஹாரி சாஹி இமாம்
- சையத் அப்துல்லா புஹாரி
- சையத் அஹ்மது புஹாரி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.