ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom) என்பது 2018 ஆண்டைய அமெரிக்க  அறிவியல் புனைவு சாகசத் திரைப்படமாகும். இதைஜே. ஏ. பஜோனா இயக்கியுள்ளார். இது, ஜுராசிக் பார்க் படங்களின் வரிசையில் ஐந்தாவது படம் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் (2015) முத்தொகுப்பின் இரண்டாவது படமாகும். இப்படத்தின் கதைக்களமாக மத்திய அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலில் உள்ள கற்பனைத் தீவான இஸ்லா நிப்ளர அமைந்துள்ளது. இதன் முந்தைய படத்தின் பாத்திரங்களில் நடித்த  கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், பி. டி. வோங், ஜெஃப் கோல்ட் ப்ளூம் ஆகியோரும், இவர்களுடன் ரஃபீ ஸ்பால், ஜஸ்டிஸ் ஸ்மித், டானெல்லா பிளினா, ஜேம்ஸ் க்ரோன்வெல், டோபி ஜோன்ஸ், டெட் லெவின், இசபெல்லா சொர்மான் மற்றும் ஜெரால்டின் சாப்ளின் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்
Jurassic World: Fallen Kingdom
இயக்கம்ஜே. ஏ. பஜோனா
கதை
  • கொலின் ட்ரெவ்ரோ
  • டெரெக் கொன்னோலி
மூலக்கதைஎழுத்து
படைத்தவர் மைக்கேல் கிரிக்டன்
இசைமைக்கேல் ஜெயச்சினோ
நடிப்பு
  • கிறிஸ் ப்ராட்
  • ப்ரைஸ் டாலஸ் ஹோவர்ட்
  • ரஃப் ஸ்பேல்
  • ஜஸ்டிஸ் ஸ்மித்
  • டானெல்லா பிளினா
  • ஜேம்ஸ் கிரோன்வெல்
  • டோபி ஜோன்ஸ்
  • டெட் லெவின்
  • பி. டி. வோங்
  • இசபெல்லா சொர்மென்
  • ஜெரால்டின் சாப்ளின்
  • ஜெஃப் கோல்ட் ப்ளூம்
ஒளிப்பதிவுஆஸ்கார் ஃபோரா
படத்தொகுப்புபெர்னாட் விலாப்லானா[1]
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்[2]
வெளியீடுமே 21, 2018 (2018-05-21)(WiZink Center)
சூன் 22, 2018(United States)
ஓட்டம்128 நிமிடங்கள்[3]
நாடுஐக்கிய அமெரிக்கா[4]
மொழிஆங்கிலம்

படத்தின் படப்பிடிப்பானது 2017 பெப்ரவரி முதல் சூலை வரை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஹவாயில் நடந்தது. படத்தின் சிறப்புக் காட்சியானது ஸ்பெயினின் மத்ரித்தில் 2018 மே 21, 2018 அன்று திரையிடப்பட்டது. அமெரிக்காவில் யுனிவர்சல் பிக்சர்சால் 2018 சூன் 22, அன்று  வெளியிடப்பட உள்ளது. இப்படமானது தமிழில் ஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தின் தொடர்ச்சியாக இன்னும் பெயரிடப்படாத படம் 2021 சூன் 10 அன்று  வெளியிடப்பட உள்ளது.

கதைச்சுருக்கம்

இதன் முந்தைய படமான ஜுராசிக் வேர்ல்ட் கதை நிகழ்வின் நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு கதை தொடங்குகிறது. நடு அமெரிக்காவின் கரையோரம் உள்ள இஸ்லா நிப்ளர என்ற கற்பனைத் தீவுக்கு, ஜுராசிக் பார்க்கின் நிர்வாகியான கிளாரியும் அவருடைய காதலனும் டைனோசர் பயிற்சியாளருமான ஓவெனும் வருகின்றனர். காரணம் அந்தத்தீவில் வெடிக்கவிருக்கும் எரிமலைகளால் ஏற்படும் அழிவிலிருந்து தீவில் எஞ்சியிருக்கும்  டைனோசர் குட்டிகளைக் காப்பாற்றும் நோக்கமாகும். பெரிய டைனோசர்களிடம் இருந்து தப்பியும், வெடித்துச் சிதறும் எரிமலைகளில் இருந்து டைனோசர் இனக்குட்டிகளை காப்பாற்றப் போராடுவதே கதையாகும். 

மேற்கோள்கள்

  1. Bayona, JA (December 29, 2016). "Excited to announce that my longtime collaborator @BernatVilaplana will be the editor for the new Jurassic film". பார்த்த நாள் December 31, 2016.
  2. Rebecca Ford (July 23, 2015). "'Jurassic World 2' Set for 2018". The Hollywood Reporter. (Prometheus Global Media). மூல முகவரியிலிருந்து July 24, 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 24, 2015.
  3. "JURASSIC WORLD: FALLEN KINGDOM (12A)". British Board of Film Classification (May 26, 2018). பார்த்த நாள் May 26, 2018.
  4. "Untitled Jurassic World Sequel (2018)". AllMovie. மூல முகவரியிலிருந்து April 5, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் April 5, 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.