ஜீவா ஜீவரத்தினம்

ஜீவா ஜீவரத்தினம் (நவம்பர் 23, 1939 - அக்டோபர் 20, 1997) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கேயுள்ள துறைநீலாவணையில் பிறந்தவர். ஜோர்ஜ் ஜீவரத்தினம் என்பது இவரது இயற்பெயர். மலையகத்தில் பதுளை போன்ற பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார்.[1]

50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வாழும் கவிதை என்னும் ஒரு கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது. பா நாடகங்கள், வானொலி, மற்றும் மேடைக் கவியரங்கக் கவிதைகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார்.[1]

விருதுகள்

  • மானம் என்ற பா நாடகம் சாகித்திய மண்டலம் நடத்திய நாடகப் போட்டியில் பரிசு பெற்றது.[1]
  • மலையுதிர் மணிகள் என்னும் ஏசுவின் மலைப்பிரசங்க வெண்பாக்கள் சர்வதேச ஆசிரியர் நாளை ஒட்டி கல்வி அமைச்சு 1996 இல் நடத்திய கவிதைப் போட்டியில் ரூ.10,000 முதல் பரிசு பெற்றது.[1]

மேற்கோள்கள்

  1. ஜீவா ஜீவரெத்தினம். வீரகேசரி. 07 சூன் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.