ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி

ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி (Giovanni Battista Amici, 25 மார்ச் 1786 – 10 ஏப்ரல் 1863) இத்தாலிய வானியலாளரும், நுண்ணோக்கியாளரும், தாவரவியலாளரும் ஆவார்.

ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி
பிறப்பு25 மார்ச் 1786
மொடெனா
இறப்பு10 ஏப்ரல் 1863 (அகவை 77)
புளோரன்சு
படித்த இடங்கள்பொலோஞா பல்கலைக்கழகம்
பணிவானியல் வல்லுநர், உயிரியல் அறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், பொறியாளர், botanist, புத்தாக்குனர்
விருதுகள்Order of Saint Joseph, Order of Saints Maurice and Lazarus
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்வானியல்
நிறுவனங்கள்
  • University of Modena and Reggio Emilia
Author abbrev. (botany)Amici

அமிசி தற்கால இத்தாலியில் உள்ள மாடெனாவில் பிறந்தார். பொலோகுனா கல்விக்குப் பின்னர் மாடெனாவில் கணிதவியல் பேராசிரியரானார். 1831 இல் மாடெனா துக்கியில் ஆராய்ச்சி பொது ஆய்வாளரானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, புளோரன்சு வான்காணகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு இவர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விரிவுரை ஆற்றியுள்ளார். அமிசி புளோரன்சு நகரில் 1863 இல் இறந்தார்.இவர் ஒளித்தெறிப்புத் தொலைநோக்கி ஆடிகளின் மேம்படுத்த்லுக்காக மிகவும் புகழ்பெற்றார். குறிப்பாக, நுண்ணோக்கியின் கட்டுமானத்த்க்காக பெயர்பெற்றவர். இவர் திறமையும் நுட்பமும் வாய்ந்த நோக்கீட்டாளர் ஆவர். இவர் இரட்டை விண்மீன்கள், வியாழனின் நிலாக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த்தோடு சூரியனின் நடுவரை விட்டத்தையும் முனை விட்டங்களையும் அளந்தார். மேலும் இவர், தாவர் (நிலைத்திணை) சாற்றின் சுழலோட்டத்தையும் பூத்தலையும் நன்னீர் நுண்ணுயிரிகளைப் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தான் முதன்முதலாக பொலன்தாளை இனங்கண்டவர் ஆவார்.[1]

இவர் இருபடிம நோக்கி, நேரடி காட்சிப் பட்டகம், அமிசியின் கூரைப் பட்டகம் ஆகியவற்றைப் புதிதாக உருவாக்கினார்.

அமிசி எனும் நிலாக் குழுப்பள்ளம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. P. Pearle, K. Bart, D. Bilderback, B. Collett, D. Newman, S. Samuels (2010). "Early Pollen Research".

மேலும் படிக்க

  • Ronchi, Vasco (1970). "Amici, Giovan Battista". Dictionary of Scientific Biography 1. New York: Charles Scribner's Sons. 135–137. ISBN 0-684-10114-9. (Note: this source gives Amici's date of death as 1868).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.