ஜின்னா சரிபுத்தீன்
அகமது ஜின்னாஹ் சரிபுத்தீன் (பிறப்பு: செப்டம்பர் 1, 1943) இலங்கை கிழக்கு மாகாணத்தில் மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்துறையில் கவிதை, சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், மொழிமாற்றுக் கவிதைகள் என பல துறைகளிலும் ஈடுபட்டுவரும் இவர் டாக்டர் ஜின்னாஹ் சரிபுத்தீன் எனும் பெயரால் அறியப்பட்ட ஓர் இலக்கியவாதியும், தனியார் மருத்துவருமாவார்.
டாக்டர் ஜின்னாஹ் சரிபுத்தீன் | |
---|---|
![]() | |
பிறப்பு | அகமது ஜின்னாஹ் சரிபுத்தீன் செப்டம்பர் 1. 1943 மருதமுனை |
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | மருத்துவர் ,ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ஆ. மு. சரிபுத்தீன், ஆயிஸா உம்மா |
உறவினர்கள் | மனைவி ஹம்சியா பரீதா |
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை மருதமுனையைச் சேர்ந்த நாடறிந்த புலவர் புலவர்மணி ஆ. மு. சரிபுத்தீன், ஆயிசா உம்மா தம்பதிகளின் புதல்வராக பிறந்த இவர் 9 பெண் சகோதரிகளுடனும், 8 சகோதரர்களுடனும் கூடப் பிறந்தவர். இவரின் மனைவி ஹம்சியா பரீதா ஆவார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
வெளிவந்த நூல்கள்
- முத்துநகை (கவிதைத் தொகுப்பு) 1989
- பாலையில் வசந்தம் (கவிதைத் தொகுப்பு) 1989
- மஹ்ஜபீன் காவியம் (600 பாடல்கள்) 1992
- புனித பூமியிலே காவியம் 1998 (1000 பாடல்கள்)
- பனிமலையின் பூ பாளம் 1995
- கருகாத பசுமை (புதினம்) 2000
- ஜின்னாஹ்வின் இரு குறுங் காவியங்கள் 2001
- கடலில் மிதக்கும் மாடிவீடு 2002
- அகப்பட்ட கள்வன் 2003
- பெற்றமனம் (சிறுகதைத் தொகுப்பு) 2003
- எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்) 2003
- பண்டார வன்னியன் காவியம் 2005 (1570 பாடல்கள்)
- திருநபி காவியம் 2006
- திருமறையும் நபிவழியும் (கவிதைத் தொகுப்பு) 2007
- வேரருந்த நாட்கள் (சிறுகதைத் தொகுப்பு) 2008
- சிறுமியும் மந்திரக் கோலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
- தீரன் திப்பு சுல்தான் காவியம் (1700 பாடல்கள்)
- மொழிமாற்றக் கவிதைகள், அன்பின் கருணையின் பேரூற்று (டாக்டர் ஏ.சீ.எஸ். ஹமீதின் கவிதைகள்)
கவிதைகள்
இவரால் இயற்றப்பட்ட கவிதைகளின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் அதிகமாகுமென கணக்கிடப் பெற்றுள்ளது.
அகில இலங்கை ரீதியாகப் பெற்ற பரிசில்கள்
- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய நாவற்குழியூர் நடராசன் கவிதைப் போட்டி (1996), 1ம் பரிசு
- வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசில் 'புனித பூமியிலே' காவியம் (1998)
- கலாசார அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இணைந்து நடத்திய மிலாத் சிறுகதைப் போட்டி (2001), 1ம் பரிசு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.