ஜி. எஸ். எல். வி மார்க் III

ஜி. எஸ். எல். வி மார்க் III (The Geosynchronous Satellite Launch Vehicle Mark III) ஒரு செயற்கைக்கோள் ஏவுகணை ஆகும். இஸ்ரோ (ISRO)வினால் தயாரிக்கப்பட்ட இது ஒரு முறை மட்டுமே ஏவும் மீளப்பாவிக்க இயலாத வகை செலுத்து வாகனம் ஆகும்.[3][4] 5 ஜூன் 2017 அன்று 17:28 மணியளவில் இந்தியாவின் சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-19 (GSAT-19) செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.[5] இந்தச் செலுத்து வாகனத்தின் மூலம் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த இயலும். மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் இயலும். இச்செலுத்து வாகனத்தின் மூன்றாவது அடுக்கில் கடுங்குளிர் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக எடையுடையவற்றை உந்தித் தள்ள இயலும்.[6][7]

ஜி. எஸ். எல். வி மார்க் III

ஜி. எஸ். எல். வி மார்க் III டி2 - ஜிசாட்-29 உடன்
தரவுகள்
இயக்கம்Heavy-Lift Launch System
அமைப்புஇஸ்ரோ
நாடு இந்தியா
அளவு
உயரம்42.4 m
விட்டம்4.0 m
நிறை630,000 கிலோகிராம்
படிகள்2
கொள்திறன்
Payload to LEO8,000 கிலோகிராம்[1]
Payload to
GTO
4,000 கிலோகிராம் [1][2]
ஏவு வரலாறு
நிலைசெயலில்
ஏவல் பகுதிசதீஸ் தவான் விண்வெளி மையம்
மொத்த ஏவல்கள்3
வெற்றிகள்3
முதல் பயணம்18 டிசம்பர் 2014 (துணை சுற்றுப்பாதை)

5 ஜூன் 2017 (சுற்றுப்பாதை)

Boosters (Stage 0) - S-200
No boosters 2
Engines1 திட எரிபொருள்
Thrust7698 கிலோ நியூட்டன்
குறித்த உந்தம்269 வினாடிகள்
எரிநேரம்108 வினாடிகள்
எரிபொருள்திட எரிபொருள்
First Stage - L-110
Engines2 விகாஸ்
Thrust1,600 கிலோ நியூட்டன்
குறித்த உந்தம்300 sec
எரிநேரம்220-230 வினாடிகள்
எரிபொருள்UDMH + N2O4
Second Stage - C-25
Engines1 CE-20
Thrust200 கிலோ நியூட்டன் (20 Tf)
குறித்த உந்தம்450 வினாடிகள்
எரிநேரம்720 வினாடிகள்
எரிபொருள்LOX/LH2

வரலாறு

ஜி. எஸ். எல். வி மார்க் III செயற்கைக்கோளின் மேம்பாட்டுப் பணிகள் 2000 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு முதல் ஏவுதல் 2009 - 2010 என திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணிகளால் திட்டமிட்டபடி ஏவ இயலாமல் போனது.[8] 15 ஏப்ரல் 2010 ஜி. எஸ். எல். வி மார்க் II செலுத்து வாகனத்தின் மேலடுக்கு கடுங்குளிர் இயந்திரம் சரியாக இயங்காமல் தோல்வியடைந்ததும் தாமதத்திற்கான காரணங்களில் ஒன்றாகும்.[8]

கடுங்குளிர் இயந்திர மேம்பாடு

1987 ஆம் ஆண்டில் இந்திய அரசு இன்சாட்-2 வகை செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அனுமதி அளித்தது. இவ்வகை செயற்கைக்கோள்களின் எடை 2 டன்களுக்கும் அதிகமாக இருந்ததால் புவிநிலைச் சுற்றுப்பாதைக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்த கடுங்குளிர் இயந்திரம் தேவையானதாக இருந்தது. ரஷ்யாவிடமிருந்து இவ்வகை இயந்திரங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தடைசெய்யப்பட்டது.[9] இதன் காரணமாக ரஷ்யாவின் வடிவமைப்பில் உள்நாட்டிலேயே கடுங்குளிர் இயந்திரம் தயாரிக்கப்பட்டது.[10]

ஒப்பீட்டு செலுத்து வாகனங்கள்

ஜி.எஸ்.எல்.வி மார்க் III செலுத்து வாகனத்தை கீழ்க்கண்ட செலுத்து வாகனங்களுடன் ஒப்பிடலாம்,

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அறிவியல் சாதனை: இஸ்ரோவின் பாகுபலி, தி இந்து, 2017 சூன் 13

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.