ஜார்ஜ் எவரஸ்ட்

ஜார்ஜ் எவரஸ்ட் (Colonel Sir George Everest, சூலை 4, 1790 - டிசம்பர் 1, 1866) இவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது.

ஜார்ஜ் எவரஸ்ட்
எவரஸ்ட்
பிறப்பு4 சூலை 1790
இறப்பு1 டிசம்பர் 1866 (aged 76)
வாழிடம்கிரிக் ஃகோவெல், வேல்ஸ்
தேசியம்ஜக்கிய இராச்சியம்
துறைபுவியியல்
அறியப்படுவதுபெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீடு

வரலாறு

இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டில் 1790இல் பிறந்தார். 1806இல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்குப் பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830இல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843இல் தன் நாட்டுக்குத் திரும்பி 1862இல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரானார். 1866இல் மரணமடைந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. FreeBMD.org.uk gives death age 76, Q4 1866, in the Kensington Registration District
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.