ஜமி அல்-தவரிக்

ஜமி அல்-தவரிக், (அரபு மொழி: جامع التواريخ நிகழ்ச்சிகளின் தொகுப்பு, மொங்கோலியம்: Судрын чуулган, பாரசீகம்: جامع‌التواریخ ) என்பது ஒரு இலக்கிய மற்றும் வரலாற்று வேலைப்பாடு ஆகும். இது பாரசீகத்தில் மங்கோலிய இல்கானேடு ஆட்சியில் உருவாக்கப்பட்டது.[1] இதை ரசித்-அல்-தின் ஹமதனி (1247–1318) என்பவர் கி.பி. 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதினார். பரந்த அளவிலான நிகழ்வுகளை உள்ளடக்கியதின் காரணமாக இவ்வேலைப்பாடு "முதல் உலக வரலாறு" என்று அழைக்கப்படுகிறது.[2] இது மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவ்வேலைப்பாட்டின் தற்போதைய எஞ்சியிருக்கும் பகுதிகள் சுமார் 400 பக்கங்கள் ஆகும்.

மங்கோலியப் போர்வீரர்கள். படம்: ரசித்-அல்-தின் ஹமதனியின்ஜமி அல்-தவரிக், 1305-1306.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடைப்பட்ட மலைகள், படம்: நாசர் கலிலி சேகரிப்பு.

உசாத்துணை

  1. Inal. p. 163.
  2. Melville, Charles. "JĀMEʿ AL-TAWĀRIḴ". Encyclopædia Iranica. Columbia University. பார்த்த நாள் 2 February 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.